ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய "Tata Altroz iTurbo" வாகனம்!

இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய "Tata Altroz iTurbo" வாகனம்!

டாடா அல்ட்ரோஸ்.

டாடா அல்ட்ரோஸ்.

டாடா அல்ட்ரோஸ் ஐடர்போ (Tata Altroz iTurbo) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அல்ட்ரோஸின், இந்த வெர்சன் மிகவும் சக்திவாய்ந்த டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இது அல்ட்ரோஸ் பிரிவில் ஏற்கனவே உள்ள வழக்கமான பெட்ரோல் எஞ்சின் வகைகளுடன் ஒப்பிடும்போது பிரீமியத்திற்கு அதிக செயல்திறனை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் ஆல்ட்ரோஸ் சிறப்பாக செயல்பட்டு வரும் நேரத்தில், டாடா அல்ட்ரோஸ் ஐடர்போ வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  இந்த கார் விற்பனையில் மாருதி சுசுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற வாகனங்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் அதன் ஹூட்டின் கீழ் இருப்பதால், வோக்ஸ்வாகன் போலோ 1.0 டிஎஸ்ஐ (Volkswagen Polo 1.0 TSI) மற்றும் ஹூண்டாய் ஐ 20 டர்போ (Hyundai i20 Turbo) மாடல்களுக்கு எதிராக அல்ட்ரோஸ் ஐடர்போ போட்டியிடும் என்றும் அதிர்பார்க்கப்படுகிறது.

  மேற்கண்ட இரண்டு வாகனமும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் அம்சங்களை கொண்டுள்ளன. சமீபத்தில், டாடா மோட்டார்ஸ் தனது சமூக ஊடக தளங்களில் அல்ட்ரோஸ் ஐடர்போவின் டீஸரை வெளியிட்டது. மேலும் இந்தியாவில் அதன் அறிமுக தேதியை குறித்தும் பல்வேறு தகவல்களை வெளியிட்டது.

  இதேபோல மற்றொரு டீஸரில், டாடா மோட்டார்ஸ் டர்போசார்ஜ் செய்யப்பட்ட அல்ட்ரோஸின் பெயரை அல்ட்ரோஸ் ஐடர்போ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.

  மேலும் படிக்க...Sabarimalai 2021 : சபரிமலைக்கு வந்தடைந்தது திரு ஆபரண ஊர்வலம்..

  ஹூண்டாய் i20 மற்றும் மாருதி சுசுகி பலேனோவுக்கு அடுத்தபடியாக அல்ட்ரோஸ் அதன் பிரிவில் சிறந்த விற்பனையாகும் மாடலாக உருவெடுத்துள்ளது. இது தற்போது டாடா மோட்டார்ஸின் போர்ட்ஃபோலியோவில் அதிகம் விற்பனையாகும் தயாரிப்பு ஆகும். இது டொயோட்டா கிளான்ஸா, ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், வோக்ஸ்வாகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. அல்ட்ரோஸ் ஏற்கனவே 86 பிஎஸ் சக்தியையும் 113 என்எம் டார்க்கையும் இயற்கையாகவே கொண்டிருக்கும் பெட்ரோல் எஞ்சின் விருப்பத்துடன் வருகிறது.

  அதேபோல, இதன் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் 90 பிஎஸ் சக்தியையும் 200 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்த இரண்டு என்ஜின்களும் ஐந்து வேக மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றன. அந்த வகையில், டாடா ஆல்ட்ரோஸ் ஐடர்போ 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே டாடா நெக்சானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 120 பிஎஸ் சக்தியையும் 170 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது.

  நெக்சானில் இந்த எஞ்சின், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது 6-ஸ்பீட் ஏஎம்டி கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வருகிறது. மாற்றங்களைப் பொறுத்தவரை, புதிய ஐடர்போ மாறுபாடு தற்போதைய அல்ட்ரோஸைப் போலவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பின்புறத்தில் புதிய டர்போ பேட்ஜ் கூடுதலாக புதிய ப்ளூ கலர் விருப்பத்துடன் கருப்பு நிற அவுட் ரூப் என இரட்டை வண்ணத்தில் வருகிறது.

  ஏற்கனவே இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கு கீழ் விற்பனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ் பாதுகாப்பான ஹேட்ச்பேக் என்ற நிலையை வகிக்கிறது. ஏனெனில் இது குளோபல் என்சிஏபி (Global NCAP) மேற்கொண்ட விபத்து சோதனைகளின் போது ஐந்து நட்சத்திரங்களை பெற்றது. அதேபோல டாடா ஆல்ட்ரோஸ் ஐடர்போவின் விலையைப் பொறுத்தவரை, ரூ.10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: TATA