6,499 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள ரெட்மி..!

2 ஜிபி மற்றும் 3ஜிபி என இரண்டு ரகங்களில் இந்த போன் உள்ளது. இரண்டுமே 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளன.

6,499 ரூபாய்க்கு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள ரெட்மி..!
ரெட்மி 8A
  • News18
  • Last Updated: February 11, 2020, 3:19 PM IST
  • Share this:
ஜியோமி நிறுவனம் இன்று மட்டும் இரண்டு தயாரிப்புகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

மலிவு விலையிலான ஸ்மார்ட்போன் மற்றும் புய்திய ரெட்மி பவர்பேங்க் ஒன்றையும் ஜியோமி அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி 8A ஸ்மார்ட்போன் வெறும் 6,499 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது. 6.22 இன்ச் ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு எனத் தோற்றத்தில் அசத்துகிறது ரெட்மி 8A .

கேமிரா திறனைப் பொறுத்தவரையில் 13+2 மெகாபிக்சல் ரியர் கேமிரா திறன் உடன் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமிராவும் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இதனுடன் கூகுள் லென்ஸ் கொடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சிறப்பம்சமாகும். கூகுள் லென்ஸ் போன் கேமிரா உடன் இன் பில்ட் ஆகக் கொடுக்கப்பட்டுள்ளது.


2 ஜிபி மற்றும் 3ஜிபி என இரண்டு ரகங்களில் இந்த போன் உள்ளது. இரண்டுமே 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளன. பேட்டரி திறன் 5,000mAh ஆகும். 2ஜிபி போன் 6,499 ரூபாய்க்கு 3ஜிபி போன் 6,999 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் அமேசான், Mi.com மற்றும் Mi ஸ்டோர்களில் இந்த போன் விற்பனையில் இருக்கும்.

மேலும் பார்க்க: ஒருவழியாக ’வாட்ஸ்அப் பே' சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்தது..!- பயன்படுத்துவது எப்படி?
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading