Home /News /technology /

சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள நட்சத்திரத்தில் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ள நட்சத்திரத்தில் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

புதிய கிரகம்

புதிய கிரகம்

New Planet : ப்ராக்ஸிமா டி என்கிற கிரகமானது குறிப்பிட்ட நட்சத்திர அமைப்பில் கண்டறியப்பட்டுள்ள மூன்றாவது கிரகமாகும்.

சிலியில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (European Southern Observator) மிகப் பெரிய தொலைநோக்கியை பயன்படுத்தும் வானியலாளர்களின் குழு, நமது சூரிய குடும்பத்திற்கு மிக நெருக்கமான நட்சத்திரமான ப்ராக்ஸிமா சென்டோரியை (Proxima Centauri) சுற்றி வரும் மற்றொரு கிரகத்தின் ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர்.

அறியாதோர்களுக்கு ப்ராக்ஸிமா சென்டோரி என்பது சூரியனுக்கு மிக அருகில் உள்ள ஒரு நட்சத்திரம் ஆகும், சூரியனுக்கும் இதற்கும் இடையில் உள்ள தூரம் வெறும் நான்கு ஒளி ஆண்டுகளே (light years) ஆகும். இங்கே ஒரு லைட் இயர் என்றால் 9.461 ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் ஆகும்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்திற்கு ப்ராக்ஸிமா டி (Proxima d) என்று பெயரிடப்பட்டுள்ளது, சூரியனிலிருந்து புதன் கிரகத்திற்கு இடையே இருக்கும் தொலைவில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான, அதாவது நான்கு மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் ப்ராக்ஸிமா சென்டோரியை, ப்ராக்ஸிமா டி சுற்றி வருகிறது.

இதையும் படியுங்கள் : காங்கிரஸ் கட்சியை ராகுலும், பிரியங்காவுமே தோற்கடித்து விடுவார்கள்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

ப்ராக்ஸிமா டி என்கிற கிரகமானது குறிப்பிட்ட நட்சத்திர அமைப்பில் கண்டறியப்பட்டுள்ள மூன்றாவது கிரகமாகும். மேலும் இந்த நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரங்கங்களிலேயே மிகவும் எடை குறைவானதும் கூட. பூமியின் நிறையில் (mass) நான்கில் ஒரு பங்கு மட்டுமே உள்ள இந்த கிரகம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் இலகுவான வெளிக்கோள்களில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பு பற்றிய விவரங்கள் வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் (Astronomy & Astrophysics journal) வெளியிடப்பட்டுள்ளது.

போர்ச்சுகலின் இன்ஸ்டிடியூட்டோ டி அஸ்ட்ரோபிசிகா இ சியென்சியாஸ் டூ எஸ்பாகோவின் (Instituto de Astrofisica e Ciencias do Espaco) ஆராய்ச்சியாளர் ஜோவா ஃபரியா, "நமது அண்டை நட்சத்திரங்கள் சுவாரஸ்யமான புதிய உலகங்களால் நிரம்பியுள்ளது, இந்த கண்டுபிடிப்பு, ஆய்வு மற்றும் எதிர்கால ஆய்வுகளுக்கு வழிவகுக்கக்கூடியதாக இருக்கிறது" என்று கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள் : PSLV C-52 ராக்கெட் மூலம் 3 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது இஸ்ரோ...

ப்ராக்ஸிமா டி - நட்சத்திரத்திற்கும் வாழத்தக்க மண்டலத்திற்கும் (habitable zone) இடையில் சுற்றுகிறது. மேலும் இது ப்ராக்ஸிமா சென்டோரியை ஒருமுறை சுற்றி முடிக்க ஐந்து நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்த நட்சத்திர அமைப்பை சுற்றி ஏற்கனவே இரண்டு கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒன்று - ப்ராக்ஸிமா பி, பூமியுடன் ஒப்பிடக்கூடிய நிறை கொண்ட ஒரு கிரகம், ஒருமுறை சுற்றி முடிக்க 11 நாட்கள் எடுத்துக்கொள்கிறது, இதுவும் வாழத்தக்க மண்டலத்திற்குள் உள்ளது, இன்னொன்று - ப்ராக்ஸிமா சி, இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற மிகவும் நீளமான சுற்றுவட்டப் பாதையை கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கொரோனாவை விட பெரிய ஆபத்து காத்திருக்கிறது!

மூன்றாவது கிரகமான ப்ராக்ஸிமா பி சில ஆண்டுகளுக்கு முன்பு இஎஸ்ஓ-வின் 3.6 மீட்டர் டெலஸ்க்கோப்பில், ஹார்ப்ஸ் (HARPS) கருவியை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டில், ப்ராக்ஸிமா அமைப்பை இஎஸ்ஓ-வின் வெரி லார்ஜ் டெலஸ்க்கோப்பில் ஒரு புதிய கருவியின் வழியாக விஞ்ஞானிகள் கவனித்தபோது இது கண்டறியப்பட்டது.

இந்த கன்டுபிடிப்பின் போது, ​​வானியலாளர்கள் ஐந்து நாள் சுற்றுப்பாதையை கொண்ட ஒரு பொருளுடன் தொடர்புடைய சிக்னலையே முதலில் கண்டறிந்தனர். அந்த சிக்னல் மிகவும் பலவீனமாக இருந்ததால், அதை தெளிவாக கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் குழுவானது எஸ்பிரெஸ்ஸோ (ESPRESSO - Echelle SPectrograph for Rocky Exoplanets and Stable Spectroscopic Observations) உடன் பின்தொடரும் கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இதையும் படியுங்கள் : ஊர் சுற்றலாம் வாங்க! டெல்லியிலிருந்து லண்டன் வரை அழைக்கும் சுற்றுலா நிறுவனம்.! கட்டணம் தெரியுமா.?

பூமியின் நிறையில் நான்கில் ஒரு பங்கை கொண்ட இந்த ப்ராக்ஸிமா டி கிரகம், ரேடியல் வேலாசிட்டி (radial velocity) நுட்பத்தைப் பயன்படுத்தி அளவிடப்பட்ட எக்ஸோபிளானெட்களிலேயே மிகவும் இலகுவானதாகும். இது சமீபத்தில் எல் 98-59 கிரக அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்தை விட குறைவானதாகும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Sun

அடுத்த செய்தி