ஐஃபோன் 12 போன்களின் விற்பனையில் புதிய சலுகைகள் அறிவிப்பு

ஐஃபோன் 12 போன்களின் விற்பனையில் புதிய சலுகைகள் அறிவிப்பு

புதிதாக அறிமுகமாகியுள்ள ஐஃபோன் 12 போன்களின் விற்பனையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள ஐஃபோன் 12 போன்களின் விற்பனையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. APPLE tradein சலுகைகள் மூலம் ஐபோன் மற்றும் மற்ற ஆண்டிராய்டு போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் 22,000 ரூபாய் வரை ஐஃபோன் 12ன் விலையில் தள்ளுபடி கிடைக்கும். கடந்த 23ம் தேதி ஐபோன்களில் புதிய மாடல்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட ஐபோன் 12 வகை மாடல்கள் வெள்ளிக்கிழமை முதல் டெலிவரி செய்யப்படுகின்றன.    இந்நிலையில் ஆன்லைனில் புதிதாக ஐஃபோன்களை வாங்க விரும்புவோர் ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பழைய ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் சலுகை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஐபோன் 12 மாடலில் 64 ஜிபி இன்டர்நெல் மெமரி கொண்ட போனின் விலை 79,900 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Rizwan
    First published: