இந்தியாவில் செல்போன் அறிமுகம் ஆனபோது விற்பனைக்கு வந்த முதல் போன்களில் நோக்கியா நிறுவன போனும் ஒன்று. ஒரு காலத்தில் செல்போன் என்றால் அது நோக்கியா போன் தான். அந்த அளவிற்கு இந்திய சந்தைகளில் நோக்கியா போன் பிரபலம். ஆனால் அடுத்தடுத்து பல்வேறு முன்னனி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மேம்பட்ட அப்டேட் மற்றும் வசதிகளுடன் அறிமுகம் செய்தன. அவைகளுடன் நோக்கியா போட்டி போட முடியாமல் சந்தையில் பின்தங்கி விட்டது. ஆனால் இன்றும் நோக்கியா தயாரிப்புகளுக்கென பிரத்யேக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை குறிவைத்து தற்போது நோக்கியா நிறுவனம் புதிய தயாரிப்புகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வரிசையில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை நோக்கியா அறிமுகம் செய்துள்ளது.நோக்கியாவின் புதிய சி31 ஸ்டாாட் போன் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தேதி இன்னும் குறிப்பிடவில்லை. இருந்தபோதிலும் புதிய நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா சி31 ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த நோக்கியா சி31 போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 720×1600 பிக்சல்ஸ் ரெசல்யூசன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது சி31 ஸ்மார்ட் போன். அதோடு இதன் வடிவமைப்பில் மிக கவனம் செலுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம். ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளதுதால் நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதோடு, 13 எம்.பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சாரருடன், ஆட்டோஃபோகஸ் லென்ஸ் என்ற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Read More : இந்தியாவில் சக்கை போடு போடும் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை..
நோக்கியா சி31 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளது. வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆப்சன்களும் உள்ளது இந்த நோக்கியா சி 31 ஸ்மார்ட்போனில். இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,499-க்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. கருப்பு, கிரே மற்றும் புளூ டோன் கலர்களில் இந்த போன் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. புதிய நோக்கியா சி31 சீரீ்ஸ் போன குறித்த தகவல்கள் நோக்கியாவின் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nokia, Smartphone, Technology