மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் - டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

வாட்ஸ் அப்

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 • Share this:
  முதலில் தகவல் பதிவிட்டவர்கள் குறித்த விபரங்களை அரசு கோரினால் வழங்க வேண்டும், குறை தீர்ப்பு அலுவலர்களை இந்தியாவில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.

  அந்த விதிமுறைகளை நிறைவேற்ற அனைத்து சமூக வலைதளங்களுக்கும், கூகுள் உள்ளிட்ட தேடுதளங்களுக்கும் நேற்றுவரை மத்திய அரசு அவகாசம் வழங்கியிருந்தது. அவகாசத்தை நீட்டியுள்ளதாக மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

  மத்திய அரசின் விதிமுறைகள் அரசியல் சாசனத்துக்கும், பொதுமக்களின் அடிப்படை உரிமைக்கும், தனி உரிமைக்கும் எதிரே என்பதால் விதிமுறைகளை ரத்துசெய்து உத்தரவுட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்ட்டுள்ளது. தனி உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளும் சுட்டிக்காட்டி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  வாட்ஸ் ஆப்பைப் தொடர்ந்து மற்ற சமூக ஊடகங்களும் நீதிமன்றங்களை அணுகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
  Published by:Vijay R
  First published: