முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / OnePlus 9 Pro கேமராவில் இத்தனை சிறப்பம்சங்கள் உள்ளதா ?

OnePlus 9 Pro கேமராவில் இத்தனை சிறப்பம்சங்கள் உள்ளதா ?

ஒன் பிளஸ் 9 Pro

ஒன் பிளஸ் 9 Pro

ஸ்மார்ட்போன் பிரியர்களை கவரும் வகையில் அறிமுகமாகியுள்ள one plus 9 pro கேமராவில் அமைந்துள்ள புதிய தொழில்நட்பம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..

  • News18 Tamil
  • 4-MIN READ
  • Last Updated :

புதிய OnePlus 9 Pro ஸ்மார்ட்போனின் புத்தம் புதிய கேமரா ஹஸ்ஸல்பால்டு டை-அப்பிற்கு சிறந்தது மட்டுமல்ல,  புதிய Sony IMX 789 சென்சார் மற்றும் Qualcomm Snapdragon 888 சிப்-ன் ஒருங்கிணைந்த செயலில் இன்னும் பல செயல்திறன்கள் கொண்ட புதிய புகைப்பட அனுபவம் கொண்ட கேமரா  களத்தில் இறங்க உள்ளது. 

இதில் சில தொழில்நுட்பங்கள் முதல் முறையில் புதிதாக இருக்கலாம், ஆனால், பல நுட்பங்கள் கடந்து பார்த்தால் இந்த புதிய தொழில்நுட்பத்தின் அம்சம் புரியும்.

IMX789 என்றால் என்ன ?

Sony-யின்  IMX789 ஒரு புதிய ஸ்மார்ட்போன் கேமரா சென்சார், இது OnePlus 9 Pro வின் Snapdragon 888 போன்ற புதிய சிப் செட்ஸ்-ன் திறன் கொண்ட இமேஜ்-யை  பிராசஸ் செய்யும் அளவிற்கு வடிவைமைக்கப்பட்டுள்ளது. சென்சார் கொண்ட SoC ஜோடியின் கூடுதல் ஹார்ஸ் பவர் உடன் OnePlus 9 Pro 4K 120fps மற்றும் 8K 30 fps வீடியோ-வை ரெக்கார்ட் செய்ய வசதி செய்கிறது. நாங்கள், ஒரு வினாடியில் கிகாபிக்ஸல் இமேஜின் கணிப்புத்திறனை தாங்கும் அளவு இமேஜ் ப்ராசெசர் (ISP-கள்) பற்றி பேசுகிறோம். நிறைய 4K கேமெராக்கள் அந்த அளவில் கால்பங்கு மட்டுமே தாங்கும்.

ஒரு புதிய ஆட்டோ போக்கஸ் சிஸ்டம்:

ஒரு சிறந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேமெராக்கள் ஒரு காட்சிக்குள் போக்கஸ் செய்ய  பேஸ்- டிடெக்ட் ஆட்டோ போக்கஸ்(PDAF) என்ற அமைப்பை பயன்படுத்தும். PDAF வேலை செய்ய, சில நூறு அல்லது ஆயிரம் தனித்து-வடிவமைக்கப்பட்ட சென்சாரில் உள்ள புள்ளிகள் அந்த காட்சியில் இரு வெவ்வேறு  கோணத்தில் - அதாவது நமது கண்கள் போல - மற்றும் எவ்வாறு போக்கஸ் செய்வது என கடினமான கணக்குகள் செய்யும்.

பொதுவாக, இந்த பேஸ்- டிடெக்ட் பிக்ஸேல்ஸ்  சாதாரண கேமரா சென்சார் உடைய ஒளி - உணர்திறன் பிக்ஸேல்லை ஒப்பிடும் போது மிக சிறியவை இவை. இது இந்த  சென்சார்களை வெளிச்சத்திற்கு குறைந்த உணர்திறன்  கொண்டு உள்ளதால் குறைவான ஒளியிலும் நன்கு வேலை செய்யும்.

Sony-யின் அணுகுமுறை,  2x2 OCL (ஆன்-சிப் லென்ஸ்) என்றது, PDAF வேலை செய்யும் அதே முறையை பயன்படுத்துகிறது - அதாவது பல கோணங்களில் ஒரு காட்சியை நோக்குவது - ஆனால் ஒரு வழியில்  அனைத்து சென்சார்களையும் பயன்படுத்தி மற்றும் ஒளி உணர்திறனை விடாமல் இருக்கும்.

நவீன ஸ்மார்ட்போன் கேமெரா சென்சார்கள், ஒவ்வொரு பிக்ஸேலும் OCL எனப்படும் நுண்ணிய  லென்ஸ்களால் கவரப்படுகிறது. இந்த லென்ஸ் நேரடியாக ஒவ்வொரு பிக்சலுக்கும் நிறைய ஒளி தந்து உணர்திறனை அதிகப்படுத்துகிறது. Sony-யின் 2x2 OCL அணுகுமுறை அதன் நான்கு பிரிவு பிக்ஸேல்களை(2*2 கிரிட் -ல் ) ஒரு லென்ஸிற்கு, தரமாக ஒவ்வொரு பிக்ஸேலுக்கும் பல்வேறு கோணங்களில் இருந்து காட்சியை ஆராய அனுமதிக்கிறது. இந்த அணுகுமுறை வண்ணத்தின் தரத்தை மற்றும் ஒளி - உணர்திறனை உயர்த்துகிறது, குறிப்பாக பிக்ஸேல் - பின்னெடு இமேஜ்.

சத்தத்தை குறைக்க டூயல்-நேட்டிவ் ISO:

ஒவ்வொரு கேமரா சென்சாரும் அதன் சென்சார் மற்றும் அம்பிலிபிகேஷன் சர்கியூட் வடிவிற்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ஒரு நேட்டிவ் ISO  ஆவது வைத்து  இருக்கும். நீங்கள் சென்சாரை மைக் என கருதினால் ISO ஒரு லாபம், இந்த லாபத்தை வைத்து மைக்கில் ஒலி உணர்திறனை அதிகரிப்பது போல ஒளி உணர்திறனையும் அதிகப்படுத்தலாம்.

நீங்கள் லாபத்தை அதிகரிக்கும் போது, அல்லது ISO, பின்னால் வரும் சத்தங்களையும் அதிகரித்துக்காட்டும், அதனால் தான் குறைந்த ஒளியில் எடுத்த படங்கள் அதிக நாய்ஸ் இருக்கும், மேலும் அதிகமாக பூஸ்ட் செய்யப்பட்ட மைக்கில் ஹிஸ் என்ற சத்தம் வரும்.

மைக்களில் கெய்ன் இருப்பின், ஒவ்வொரு சென்சாரும் ISO ஸ்வீட் - ஸ்பாட் இருக்கும், அதில் நாய்ஸ் குறைவாகவும் ஒளி உணர்திறன் சரியாகவும் இருக்கும். இந்த ஸ்வீட் - ஸ்பாட், இருப்பினும், பகல்நேர ஷூட்டிங் பொழுது மாறிவிடும். ஒரு டூயல்- நேட்டிவ் ISO, 9 Pro-க்களின் சென்சாரில் கூடுதலாக எலக்ட்ரானிக் சர்க்யூட் மூலம் அதிக ISO உடன் தெளிவான இமேஜ் தருகிறது.

இதற்கு முடிவு? சிறந்த நாய்ஸ் கட்டுப்பாடு மற்றும் குறைந்த ஒளியிலும் தெளிவான இமேஜ்கள். டூயல்- நேட்டிவ் ISO நடைமுறை படுத்த சற்று கடினம், மற்றும் மேலும் செலவு, அதனால் தான் சில கேமெராக்கள் மட்டுமே இந்த அம்சத்தை நடைமுறையில் வைத்துள்ளது.

கோஸ்ட் -  HDR அல்லது DOL-HDR:

சாதாரண HDR தொழில்நுட்பமுறைகளில் அதன் கேமரா உங்கள் ஷாட் பொருத்து பல இமேஜ்களை வேகமாக எடுத்து அதனை மாற்று முறைக்கு மேம்படுத்த சேமித்துக் கொள்ளும்( ஒரு இமேஜின் கருப்பு மற்றும் வெளிச்ச பகுதிகளின் ஆழத்தின் வித்தியாசத்தை வைத்து).

இந்த அணுகுமுறையில் பிரச்னை என்னவென்றால் ஒவ்வொரு பிரேமிற்கும் உள்ள கால இடைவேளை, நாம் எடுக்கும் பொருள் நகரும் பொழுது இது மிகப்பெரிய பிரச்னை (ஒரு கார் அல்லது கையை அசைக்கும் ஒருவர், இன்னும் பல). இந்த இமேஜ்கள் ஒன்றுசேர்க்கப்பட்டால், சரியாக ஒருங்கிணைக்க முடியாது, மேலும் உங்கள் கேமரா சிறிய சிட்டு விளையாட்டு செய்ய வில்லை என்றால், உங்கள் பொருட்கள் பின்னால் பேய் போன்று ஒரு உருவம் வரும்.

DOL-HDR (Digital OverLap High Dynamic Range) செயல்களை மாற்றுவழியில் செய்யும். பல்வேறு இமேஜ்களை எடுப்பதற்கு பதிலாக, இந்த சென்சார் பல்வேறு வெளிப்படைகளை சென்சார் தரவு படிக்கும் பொழுது பிடிக்கிறது. இது கிட்டத்தட்ட வினாடியில் நடைபெறும், அதனால் மோஷன் ப்ளர் அல்லது கோஸ்டிங்-ல் முடியும். இது புதிய நுட்பம் அல்ல, ஆனால் இது புதிய சென்சாரில் பொருத்தப்பட்டுள்ளது மிக நல்லது.

12-பிட் RAW:

இந்த கணக்கு மிக கடினமானது, ஆனால் முக்கியமானது, ஒரு 12-பிட் RAW கிட்டத்தட்ட ஒரு பிக்சேளுக்கு 68 பில்லியன் க்ஷேடுகள் வரை ரெகார்ட் செய்யும்.  பெரும்பாலும் LCD டிஸ்பிலே ஒரு பிக்சேளுக்கு 8-பிட்ஸ் வண்ணம் தரும்(16.7 மில்லியன் க்ஷேடுகள்), மேலும் OnePlus 9 Pro போன்ற பிரீமியம் போன்கள் ஒரு பிக்சேளுக்கு 10-பிட் வண்ணம் தரும் (1.07 பில்லியன் க்ஷேடுகள்).

12-பிட் தெளிவாக அதிகம். ஏன் ஒருவர் உங்கள் டிஸ்பிளே தருவதை விட 68 முறை அதிகம் ரெக்கார்ட் செய்யவேண்டும் ?

சரி, நீங்கள் RAW ஷூட்டிங் செய்கிறீர்கள் என்றால், உங்கள் இமேஜ்களை எடிட் செய்ய வேண்டியது வரும். மேலும் அந்த இமேஜ்களை எடிட் செய்யும் பொழுது, உங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து மிச்சமாகும் டேட்டாவும் தேவைப்படும்.  12-பிட் RAW வெறும் 68 பில்லியன் வண்ணங்கள் மட்டும் தரவில்லை, அது  கூடுதலாக ரேஞ்சு தருகிறது, இது பார்க்கக்கூடிய அளவு உள்ள வண்ண குறைகளை நீங்கள் உங்கள்  இமேஜில் வண்ணங்கள் சேர்ப்பது அல்லது  நீக்குவது செய்துகொள்ளலாம்.

அல்ட்ரா - வைடு: உடையாத 50 MP இமேஜ்கள்  :

OnePlus 9 Pro-வில் உள்ள50 MP கேமரா மிக சிறப்பானது. 50 MP IMX 766 சென்சார் இந்த அல்ட்ரா- வைடில் நீங்கள் பாத்திராத பெரியது, மேலும் மிக குறைவாக உடையக்கூடியது.

பெரிய அளவு இமேஜ்கள் உங்களுக்கு தெளிவான மற்றும் நாய்ஸ் இல்லாமல் வரும், இது போகேஹ் மற்றும் பின்பகுதி பிரிப்பதற்கு சிறந்தது. ஒருங்கிணைப்பு இல்லாதது, கணக்கை சரியாக போட்டதன் முடிவு, டிஜிட்டல் மேற்பரப்பு லென்ஸ், நேரான கோடுகளை நேராக வைக்கும், உங்கள் அல்ட்ரா- வைடு ஷாட்டுகளை பார்ப்பதற்கு இயற்கையாக காட்டும்.

Hasselblad வண்ணங்கள்:

இறுதியாக, உங்களுக்கு கிடைக்கும் இமேஜ் உங்கள் கண்களுக்கு அழகாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் வண்ணங்களை ஒவ்வொரு மாதிரி பார்க்கும் பொழுது, உலக நிபந்தனைகள் சில உள்ளன. மக்களை எடுக்க மியூட்டேட் கான்ட்ராஸ்ட் மிக சிறந்தது, எடுத்துக்காட்டாக, அதிக கான்ட்ராஸ்ட் கருப்பு மற்றும் வெள்ளைக்கு மிக சிறந்தது, மற்றும் பன்ஞ்சி வண்ணங்கள் இயற்கை படத்திற்கு மிக பொருந்தும் மற்றும் பல.

ஒரு இமேஜை பிராசஸ் செய்யும் பொழுது, கேமரா சிஸ்டம் கண்டிப்பாக எந்த அணுகுமுறை சரியாக இருக்கும் என்பதை கணிக்க வேண்டும் மேலும் சரியான முடிவை அந்த காட்சிக்கு தகுந்தாற்போல் ஷாட் செய்யவேண்டும். இது மிகவும் எளிமையாக்க பட்டது தான் வண்ணத்தின் அறிவியல்.

DJI-யின் ஹசெல்பால்டு பிராண்ட் ப்ரோ-களுக்கு மத்தியில் மிக பெயர் போனது, மேலும் மிக இயற்கையான வண்ணங்களுக்கு இந்த கேமரா மற்றும் வண்ண அறிவியல் தயாரிப்பது சரியாக இருக்கும். OnePlus-Hasselblad இணைப்பு  9 Pro கேமெராவின் பிம்பத்தை உருவாக்க பயன்படுகிறது.

ஒன்றாக, இந்த அம்சங்கள் மற்றும் புதிய கருவிகள் ஒரு புதிய கேமரா சிஸ்டத்தை தருகிறது. அது சொல்லப்பட்டது, நீங்கள், அன்பார்ந்த வாசகர், யார் இந்த புதிய கேமெராக்கள் விதியை தீர்வு செய்து வருங்காலத்தில் சரியான வளர்ச்சி பாதைக்கு  வழிகாட்டுவர் நீங்கள் மட்டுமே.

இந்த உலகத்தில் உள்ள எல்லா நுட்பங்களும் உங்களுக்கு பிடிக்காததை சேர்த்து வைக்காது. பிடித்ததோ அல்லது இல்லையோ, OnePlus 9 Pro-வின் புதிய கேமராவின் உங்களது கருத்துக்களை கேட்க விரும்புகிறோம்.

First published:

Tags: Mobile phone, One plus, Technology