சிசிடிவி கேமிராக்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்...! சென்னைக்கு எத்தனையாவது இடம்?

சர்வதேச அளவில் சீனாவின் மூன்று நகரங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதிக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள நாடாகவும் சீனா உள்ளது.

சிசிடிவி கேமிராக்கள் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்...! சென்னைக்கு எத்தனையாவது இடம்?
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 20, 2019, 10:00 AM IST
  • Share this:
நாட்டின் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளுள் தற்போதைய சூழலில் சிசிடிவி கேமிராக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலக அளவில் அதிக சிசிடிவி கேமிராக்கள் உள்ள நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி டாப் 20 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்திய அளவில் டெல்லிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. தற்போது முக அடையாளங்களை வெளிப்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்திருப்பதால் சிசிடிவி கேமிராக்கள் பயன்பாடு அதிகப்படியாகவே உள்ளது. டெல்லியில் மட்டும் ஒவ்வொரு 1,000 நபருக்கும் 9.62 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக டெல்லியில் 3 லட்சத்துக்கும் அதிகமான சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

டெல்லிக்கு அடுத்தபடியாக இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் சென்னை நகரம் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு 1,000 நபருக்கும் 4.67 என்ற கணக்கில் சிசிடிவி கேமிராக்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்கள் உள்ளன. அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரங்களாகக் கருதப்படும் சான் ஃபிரான்சிஸ்கோ மற்றும் சான் டியாகோ போன்ற நகரங்களில் கூட இவ்வளவு சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்படவில்லையாம்.


சர்வதேச அளவில் சீனாவின் மூன்று நகரங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதிக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள நாடாகவும் சீனா உள்ளது.

மேலும் பார்க்க: 65 இன்ச்... 4K மாடல்... Mi டிவியை செப் 17-ல் அறிமுகம் செய்கிறது ஜியோமி

பிகில் பாடலும் காப்பியா?
First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்