• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • "ஃபைபர் எக்ஸ்பீரியன்ஸ் 399" பிளானை மீண்டும் அறிமுகம் செய்த BSNL!

"ஃபைபர் எக்ஸ்பீரியன்ஸ் 399" பிளானை மீண்டும் அறிமுகம் செய்த BSNL!

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

இந்த BSNL ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் 30 Mbps வேகத்தை வழங்கினாலும், 1000 GB பயன்பாட்டிற்கு பிறகு இதன் டவுன்லோட் ஸ்பீட் 2 Mbps-ஆக குறைக்கப்படும்.

  • Share this:
கோவிட் தொற்று நீடிப்பதன் காரணமாக வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை இன்னும் பலர் பயன்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், பிராட்பேண்ட் பேண்ட் கனக்ஷனுக்கு என்றே மாதாந்திர பட்ஜெட்டில் ஒரு கணிசமான தொகையை ஒதுக்க வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே மலிவான விலையில் கிடைக்க கூடிய ஃபைபர் பிராட்பேண்ட் பிளானை பலரும் தேடி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நல்ல செய்தி ஒன்றை கொண்டு வந்துள்ளது.

யூஸர்களுக்கான என்ட்ரி-லெவல் பிராட்பேண்ட் திட்டமான "ஃபைபர் எக்ஸ்பீரியன்ஸ் 399" பிளானை BSNL மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது. BSNL நிறுவனம் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புதிய பிராட்பேண்ட் பிளானின் விலை ரூ.399 ஆகும். இந்த பிளான் 1000 GB டேட்டா பயன்பாடு வரை 30 Mbps டவுன்லோட் ஸ்பீடை வழங்குகிறது. ரூ.399 என்ற விலையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த BSNL பிராட்பேண்ட்பிளானை நீங்கள் பெற விரும்பினால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த பிளான் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஜூலை BSNL இதே திட்டத்தை 3 மாத கால ப்ரமோஷ்னல் டைமிற்கு அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போல 90 நாட்கள் ப்ரமோஷ்னல் டைமிற்காக யூஸர்களுக்கு இந்த பிளான் கிடைக்கிறது. 90 நாட்களுக்குள் இந்த பிளானை தேர்வு செய்யும் யூசர்களுக்கு ரூ.399 என்ற சலுகை விலையில் கிடைக்கும். பிளானை சலுகை விலையில் பயன்படுத்திய 6 மாதங்களுக்கு பிறகு இந்த பிளான் யூஸர்கள், ஃபைபர் பேஸிக் ரூ.449 பிளானிற்கு மாற்றப்படுவார்கள்.

Also read... வாட்ஸ்அப் வெப் அப்டேட் - 3 முக்கிய அம்சங்கள் அறிமுகம்!

இந்த BSNL ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் 30 Mbps வேகத்தை வழங்கினாலும், 1000 GB பயன்பாட்டிற்கு பிறகு இதன் டவுன்லோட் ஸ்பீட் 2 Mbps-ஆக குறைக்கப்படும். 'Fiber Experience 399' பிளானின் கீழ் BSNL கூடுதலாக எந்த நெட்வொர்க்கிற்கும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களை வழங்குகிறது. மேலும், அமேசான் பே, ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மூலம் இந்த பிளானிற்கு பணம் கட்டும் போது யூஸர்கள் அன்லிமிட்டட் 2% ரிவார்ட் பாயிண்ட்ஸ்களை பெறலாம்.

யூஸர்கள் தங்களது ஃபைபர் எக்ஸ்பீரியன்ஸ் 399 பிளான் முடிந்ததும் பெறும் ரூ.449 BSNL ஃபைபர் பேஸிக் பேக்கேஜில் 30 Mbps டவுன்லோட் ஸ்பீட் மற்றும் 3.3TB டேட்டா ஆகியவை அடங்கும். FUP லிமிட்டை அடைந்ததும், ரூ.399 பிளானை போலவே ஸ்பீட் 2 Mbps ஆக குறைக்கப்படும். Telecom Talk படி, இந்த ₹399 திட்டம் வரையறுக்கப்பட்ட பிராந்தியங்களில் கிடைக்கும் - தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா மற்றும் கேரளா Telecom Talk-ன் படி, இந்த ரூ.399 BSNL பிளான் தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா மற்றும் கேரளா மாநில யூஸர்களுக்கு கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: