ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அப்டேட் சிரி ரிமோட்டில் (Siri Remote) வீடியோ கேம் விளையாடுவதற்கான வசதி நீக்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்பிரிங் லோடேட் நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி வெர்ச்ஷூவல் வழியாக நடைபெற்றது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே பல்வேறு புதிய அறிவிப்புகளும், அப்டேட்டுகளும் இடம்பெற்றன. புதிய ஆப்பிள் டிவி, புதிய ரிமோட் மற்றும் பர்ப்பிள் நிற ஐபோன், ஏர்டேக்ஸ் என புதிய அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டார்.
அதில்,
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 4 கே டிவியை (Apple 4k TV) அவர் அறிமுகம் செய்து வைத்தார். டிவி என்றது வழக்கமான தொலைக்காட்சியை நினைக்க வேண்டாம். அமேசான் பயர் டிவி ஸ்டிக், எம்.ஐ டிவி பாக்ஸ் போன்று சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றும் ஒரு கன்சோல். ஆப்பிள் 4கே ஸ்மார்ட் தொலைக்காட்சிக்காக புதிய ரிமோட் சிரி-யும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ரிமோட்டில் இடம்பெற்றிருக்கும் வசதி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதிய சிரி ரிமோட்டில் வீடியோ கேம்ஸ்-ஐ பிளே செய்ய முடியாது. ஏனென்றால் அதில் அக்செலோரோமீட்டர் (accelerometer) மற்றும் கிரியோஸ்கோப் (gyroscope) இடம்பெறவில்லை. ரிமோட்டின் தயாரிப்பு பகுதியை ஆய்வு செய்த டிஜிட்டல் ட்ரெண்ட்ஸ், இந்த அமைப்புகள் இல்லாததை கண்டுபிடித்து கூறியுள்ளது.
Also read... நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபில் கடும் சரிவு - முதலீட்டாளர்கள் கவலை!
புதிய ரிமோட்டில் வீடியோ கேம்மை விளையாடினால் error மெசேஜ் வருவதாக தெரிவித்துள்ள மேக்ரூமர்ஸ் ( MacRumors), கேம் விளையாட வேண்டுமென்றால் காம்படிபல் பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் (Xbox ) அல்லது MFi controller தேவை எனக் கூறியுள்ளது. இவை இல்லை என்றால் முதல் தலைமுறை ஆப்பிள் டிவி ரிமோட் இருந்தால் அதன் மூலம் வீடியோ கேம் விளையாடலாம். இந்த புதிய அம்சம் ரிமோட்டில் நீக்கப்பட்டிருப்பது ஆப்பிள் வாடிக்கையாளர் பலருக்கும் அதிருப்தியை கொடுத்துள்ளது.
ஆப்பிள் பாட்காஸ்ட் (apple podcast) செயலி புதிய தோற்றத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. புது யுஐ கொண்டிருக்கும் பாட்காஸ்ட் (apple podcast)-ல் சந்தாவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆப்பிள் சந்தாதாரர்களின் எண்ணிக்கை உயரும் என டிம் குக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், யு1 சிப்செட் கொண்ட ஏர்டேக் டிவைஸ் டிராக்கர், புதிய iMac, iPad Pro உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை புதிதாக பர்பில் நிறத்தில் அறிமுகம் செய்து வைத்த டிம்குக், iPad Pro 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் அறிமுகப்படுத்தினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.