இந்தியாவில் அதி வேக இணைய சேவைகளை வழங்குவதற்கு 5ஜி ஏலம் எடுத்த நெட்வொர்க்குகளும் துரிதமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள், மொபைல் உற்பத்தியாளர்களுடன் கைகோர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. உதாரணமாக, சில நாட்களுக்கு முன்பு தான் ஏர்டெல் 5ஜி சேவையுடன் ரியல் மீ மொபைல் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.
இதன் மூலம் மொபைல் ஃபோன் தயாரிப்பாளர்களுக்கும் டெலிகாம் சேவை வழங்குபவர்களுக்கும் என்று இரண்டு தரப்புக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக இருக்கும் டேட்டா சென்டர்களுக்கும் 5ஜி சேவைகள் பயன்படுத்தும் திட்டம் உள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம் நிறுவனத்துடன் ஏர்டெல் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும், 20 நகரங்களில் 120 நெட்வொர்க் டேட்டா சென்டர்களில் ஐபிஎம் கிளவுட் உடன் இணைந்து பாரதி ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவைகள் வழங்க இருக்கிறது.
ஏர்டெல் எட்ஜின் கம்ப்யூட்டிங் தளம், IMB கிளவுட் சேட்டிலைட்டால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கூட்டணி, ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியின் உற்பத்தி மற்றும் தர ஆய்வுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும். ஏர்டெல் பிசினஸ், தலைமை செயல் அதிகாரியான கணேஷ் லட்சுமி நாராயணன் இதைப் பற்றி கூறுகையில் “இந்தியா முழுவதுமே இப்பொழுது 5ஜி சேவைகளை பெறுவதற்கு தயாராகி வருகின்றது.
எனவே நாடு முழுவதுமே எல்லா துறைகளிலும் 5ஜி சேவைகளுக்கு அதிக தேவை இருக்கின்றது. வெவ்வேறு துறைகளின், வணிகங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை துரிதமாக விநியோகிப்பதில் மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இருப்பதை கண்டறிந்தோம்.
எங்களிடம் நாடு முழுவதும் வெளிய அளவிலான டேட்டா சென்டர்களின் நெட்வொர்க் இருக்கிறது. இது ஏற்கனவே என்-எக்ஸ்ட்ரா என்ற பிராண்டில் செயல்பட்டு வருகிறது. நாங்கள் தற்பொழுது ஐபிஎம் கிளவுட் உதவியுடன் இந்தியாவில் இருக்கும் வணிகங்களுக்கு அவர்களுடைய வணிக தேவைகளை விரைவாக, சிறப்பாக பூர்த்தி செய்வதற்கு உதவும்” என்று தெரிவித்தார்.
5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட பின்னர் உற்பத்தி முதல் ஆட்டோமொபைல் வரை பல்வேறு துறைகளில் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய வணிகங்கள் வரை மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். 5ஜி, 2035 ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார மேம்பாட்டை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.
Read More: ட்விட்டர், ஃபேஸ்புக்கிற்கு டஃப் கொடுக்கப்போகும் இன்ஸ்டா... வெளியான அசத்தல் அறிவிப்பு.!
ஐபிஎம் கிளவுட் தளத்தின் தலைவரான ஓவர் கோவில் இதைப் பற்றி கூறுகையில் ஏர்டெல் உடன் இணைந்து ஹைதரின் ஐபிஎன் ஹைப்ரிட் லவ் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு துறைகளிலும் இன்னும் விரிவாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவதற்கு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 5G technology, Airtel, Smart Phone