சமூக வலைதள உலகின் அடுத்த பரிணாமம் ட்விட்டர் ஸ்பேசஸ் மற்றும் க்ளப் ஹவுஸ்- நெட்டிசன்கள் உற்சாகம்

க்ளப்ஹவுஸ்

நெட்டிசன்களிடம் ட்விட்டர் ஸ்பேசஸ் மற்றும் க்ளப் ஹவுஸ் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 • Share this:
  டிஜிட்டல் உலகில் கருத்து பரிமாற்றத்தை ஆடியோ மூலம் மேற்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு புதிய வசதிகள் இணையதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

  ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகளைப் போல டிவிட்டரிலும் ஸ்பேசஸ் என்ற வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆடியோ வசதி மட்டும் இடம்பெற்றிருக்கும். டிவிட் பிளஸ் என்ற பகுதியில் உள்ள ஸ்பேசஸ் ஆப்ஷனை கிளிக் செய்த பின் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முடியும். இந்நிகழ்ச்சியில் பேச்சாளர்களாக அதிகபட்சம் 13 பேர் வரை இடம்பெறலாம். மற்றவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாம். செல்போனில் கான்ஃபரன்ஸ் காலில் பேசுவதை போல ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த வசதி மூலம் உரையாடலாம் என்பதால், டிஜிட்டல் மேடை என டிவிட்டர் ஸ்பேசஸை வர்ணித்து வருகின்றனர்.

  இசை வெளியீட்டை முன்னிட்டு, அண்மையில் 'ஜகமே தந்திரம்' படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேசஸில் கலந்துரையாடியதை ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பேர் கேட்டு மகிழ்ந்தனர். இதன்மூலம் டிவிட்டர் ஸ்பேசஸில் அதிகம் பேர் பங்கேற்ற கலந்துரையாடல் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

  டப்மாஸ், டிக்டாக் போன்று ஸ்பேசஸ் செயலியிலும் பயனாளர்கள் அடிமையாக வாய்ப்புள்ளதாகவும், சாதாரண விஷயங்களை கூட ஊதி பெரிதாக்கும் அபாயம் இருப்பதாகவும் சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் எச்சரிக்கிறார்.

  கிளப் ஹவுஸ் என்ற புதிய செயலியில் ஒரேநேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை உரையாடலாம். இந்த செயலியில் 'ரூம்' எனப்படும் அரட்டைப் பக்கத்தில் உள்ள ஹேண்ட் ரைஸிங் ஐகான் மூலம் உரையாடல்களில் தமது கருத்துக்களை பகிரலாம். உலகின் எந்த பகுதியிலிருந்தும் யார் வேண்டும் என்றாலும் தங்களுக்கு பிடித்த தலைப்புகளின் கீழ் நடைபெறும் திறந்தவெளி அரங்கங்களில் பங்கேற்கலாம். அதேநேரத்தில் மற்ற அரங்குகளில் அழைப்புக்கான லிங்க் இருந்தால் மட்டும் இணைய முடியும். கிளப் ஹவுஸில் இணைவதற்கு ஏற்கனவே பயனாளராக உள்ள ஒருவரது அழைப்பு இருந்தால் மட்டும் உள்நுழைந்து பயன்படுத்த முடியும். மற்ற சமூகவலைதளங்களை போல இல்லாமல் ஆண்ட்ராய்டு அல்லது ios என்ற இயங்குதளங்களில் மட்டும் கிளப் ஹவுஸ் செயலியை பயன்படுத்த முடியும்.

  மக்களை இணைப்பதற்கு பாலமாக அமையும் இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் வலியுறுத்துகிறார்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வலைதளங்களில் எழுதி எழுதி போர் அடித்து போன இணையவாசிகளுக்கு டிவிட்டர் ஸ்பேசஸ் மற்றும் கிளப் ஹவுஸ் வசதிகள் வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: