ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

'இனி இதற்கும் பணம் கட்டணும்'.. நெட்ஃபிளிக்ஸ் கொண்டுவரும் அதிரடி மாற்றம்!

'இனி இதற்கும் பணம் கட்டணும்'.. நெட்ஃபிளிக்ஸ் கொண்டுவரும் அதிரடி மாற்றம்!

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

இந்தியா போன்ற நாடுகளிலேயே ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி வரை சந்தாதாரர்களை சேர்க்க முடிவெடுத்துள்ளதால் இது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நெட்ஃபிளிக்ஸ் நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஓடிடி தளங்களில் நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்களின் மிகவும் விருப்பமான ஓடிடி தளமாகும். திரைப்படங்கள், வெப்சீரீஸ்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் ரசனைக்கேற்ப நெட்ஃபிளிக்சும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அதனால் தான் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 25 கோடி பயனர்களை கொண்டுள்ளது நெட்ஃபிளிக்ஸ். ஒரு நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரரின் பாஸ்வேர்டை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் மொபைலிலோ, லேப்டாப்பிலோ பயன்படுத்த முடியும். இது தான் இப்போதுவரை இருக்கும் நடைமுறை. இதனால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு வருமான இழப்பு ஏற்படுவதாக கருதியது அந்நிறுவனம். இதனால் கடந்த ஆண்டு முடிவில் அந்நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் இனி பாஸ்வேர்டை சந்தாதாரர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது.

புதிய தலைமை செயல் அதிகாரிகளாக கிரெக் பீட்டர்ஸ் மற்றும் டெட் சரண்டோஸ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களும் நிறுவனத்தின் முந்தைய அறிவிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பாஸ்வேர்ட் பகிர்வு என்பது அதிக அளவில் நிகழ்வதாகவும், இது நிறுவனத்தின் வருவாயை பாதிக்கிறது என்பதால் இனி பாஸ்வேர்ட் ஷேரிங் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக பாஸ்வேர்ட் ஷேரிங் வரும் மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படும். அதுவரையும் யாராவது தங்களது பாஸ்வேர்டை நண்பர்களுக்கோ மற்றவர்களுக்கோ பகிர்ந்தால் அந்த பயனர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் புதிய சிஇஓக்கள் அறிவித்துள்ளனர்.

Read More : ஸ்மார்ட்போனில் செயலிகளை மறைத்து பயன்படுத்தனுமா? இதை செய்தாலே போதும்!

 இந்தியா போன்ற நாடுகளிலேயே ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி வரை சந்தாதாரர்களை சேர்க்க முடிவெடுத்துள்ளதால் இது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நெட்ஃபிளிக்ஸ் நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது.நெட்ஃபிளிக்சை பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து அதற்கான கட்டணத்தை நிறுவனம் எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சிஇஓ பீட்டர். இது போன்ற பாஸ்வேர்ட் ஷேரிங் அதிகம் செய்யப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளான கோஸ்டாரிகா, பெரு, சிலி உள்ளிட்ட சில நாடுகளில் ஏற்கனசே சோதனை முயற்சியாக பாஸ்வேர்ட் ஷேரிங் தடை நடைமுறையில் இருக்கிறது. அதையும் மீறி பாஸ்வேர்டை பகிர்ந்தால் இந்திய ரூபாய் மதிப்பில் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதே நடைமுறையை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது நெட்ஃபிளிக்ஸ் நிர்வாகம். ஆனால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விபரத்தை இன்னும் வெளியிடவில்லை. வரும் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே இந்தியாவில் பாஸ்வேர்ட் பகிர்வு தடை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது அந்த நிறுவனம். பாஸ்வேர்ட் பகிர்வை கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்ப நுணுக்கங்களை நடைமுறைப்படுத்தவும் தயாராகிவிட்டது நெட்ஃபிளிக்ஸ். இனி ஓசியில் நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்த முடியாது. அதற்கு ஆப்பு வைக்க இருக்கிறது நெட்ஃபிளிக்ஸ்.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Netflix, Technology, Viral