• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • அசத்தலான வீடியோ கேம்களை வழங்கப் போகும் 'நெட் ஃப்ளிக்ஸ்'!! போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சி

அசத்தலான வீடியோ கேம்களை வழங்கப் போகும் 'நெட் ஃப்ளிக்ஸ்'!! போட்டி நிறுவனங்கள் அதிர்ச்சி

நெட்ஃப்ளிக்ஸ்

நெட்ஃப்ளிக்ஸ்

  • Share this:
ஓடிடி தளங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் நெட்ஃப்ளிக்ஸ், தற்போது வீடியோ கேம் துறையிலும் மும்முரமாக களம் இறங்கப் போகிறது. அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் இருந்தாலும், உலகளவில் நெட்ஃப்ளிக்ஸ்-க்கான ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம். உலகளவில் 1.70 கோடி பேரும், இந்தியாவில் மட்டும் 50 லட்சம் பேரும் இதன் சந்தாதாரர்களாக உள்ளனர் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.
கடைசியாக, மாதம் ஒன்றுக்கு ரூ. 199 என்ற ப்ளானை நெட்ஃபிளிக்ஸ் அறிவித்திருந்தது. மொபைல் யூசர்களுக்கான இந்த ப்ளான் இந்தியாவில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தனது சந்தாதாரர்களுக்காக இலவச வீடியோ கேம்களை வழங்கப் போவதாக நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஓடிடி தளங்களை காண்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீடியோ கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்கள் மட்டுமே வீடியோ கேம்களில் ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தற்போது மாறி, இளைஞர்கள், முதியோர் பல்வேறு தரப்பினரும் வீடியோ கேம்களில் மூழ்கத் தொடங்கியுள்ளனர்.

மக்களிடையே வீடியோ கேம்களுக்கு இருக்கும் வரவேற்பை உணர்ந்த நெட்ஃப்ளிக்ஸ் சில ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ கேம் துறையில் காலடி வைத்து விட்டது. “Stranger Things: 1984”, “Stranger Things 3: The Game”, “Card Blast”, “Teeter Up” மற்றும் “Shooting Hoops” உள்ளிட்ட கேம்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது. ஆனால் இவற்றை ஸ்பெய்ன், இத்தாலி மற்றும் போலந்தில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் யூசர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கான வீடியோ கேம்களை நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக சந்தாதாரர்களிடம் தனியே கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் ஓடிடி மற்றும் வீடியோ கேம்களுக்கென தனித்தனி சந்தாதாரர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்த இரு தரப்பினரையும் ஒரே தளத்தில் இணைப்பதன் மூலம் தனது சந்தாதாரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் ப்ளானில் உள்ளது நெட் ஃப்ளிக்ஸ். ஏற்கனவே ஓடிடி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், நெட்ஃப்ளிக்ஸின் புதிய அறிவிப்பு, வீடியோ கேம் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் பல்ஸை துல்லியமாக அறிந்த நிறுவனம் என்பதால், நெட்ஃப்ளிக்ஸின் வீடியோ கேம் என்ட்ரி நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த சில மாதங்களாக நெட்ஃப்ளிக்ஸ் மிகச்சிறப்பான பிஸ்னஸில் ஈடுபட்டு வருவதாக வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் டிக்டாக் இல்லாத சூழலில், 'Fast Laughs' என்ற, இன்ஃபினிட்டி ஸ்க்ராலிங் சிறிய வீடியோக்களை கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்தது.

இந்தியாவின் முக்கிய கேம் டெவலப்பிங் நிறுவனமாக இருக்கும் 'Night School Studio' வை கடந்த செப்டம்பரில் வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ், அதன் மூலம் உடனடியாக ஐரோப்பிய நாடுகளில் 5 புதிய வீடியோ கேம்களை லான்ச் செய்தது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் இன்னும் பல அறிவிப்புகளை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Musthak
First published: