• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்திய ரசிகர்களுக்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு- நெட்ஃப்ளிக்ஸ்

இந்திய ரசிகர்களுக்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு- நெட்ஃப்ளிக்ஸ்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

யூட்யூப் பிரபலங்கள் நடிப்பில் வெளியாகும் சீரிஸ், திரைப்படங்கள் என அத்தனையும் பெரிய ஹிட் அடித்து வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    2020-ம் ஆண்டில் மட்டும் இந்திய ஒரிஜினல்ஸ்-க்காக சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ ரீட் ஹேஷ்டிங்க்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமானது. ஆங்கிலம் மட்டுமல்லாது இந்திய மொழிகள் சார்ந்த தயாரிப்புகளை வெளியிடத் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது நெட்ஃப்ளிக்ஸ் நிர்வாகம். ‘சேக்ரட் கேம்ஸ்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸின் வெளியாகி இந்தியா முழுவதும் கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்த நிர்வாகம் தற்போது 3 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

    இந்தியாவில் தயாராகி வெளியான ‘மைட்டி லிட்டிள் பீம்’ நிகழ்ச்சி இந்தியா விடுத்து வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 27 மில்லியன் பேரால் பார்வையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், யூட்யூப் பிரபலங்கள் நடிப்பில் வெளியாகும் சீரிஸ், திரைப்படங்கள் என அத்தனையும் பெரிய ஹிட் அடித்து வருகின்றன.

    நெட்ஃப்ளிக்ஸ்-க்குப் போட்டியாக இந்தியாவில் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டாரைத் தொடர்ந்து புதிதாக ஆப்பிள், டிஸ்னி ஆகிய பெரும் நிறுவனங்கள் இருப்பதால் அதிகப்படியான ஒரிஜினல்ஸ் தயாரிக்க முன்னெடுப்பு செய்து வருகிறது நெட்ஃப்ளிக்ஸ்.

    மேலும் பார்க்க: சன் நெக்ஸ்ட்டில் உள்ள தமிழ் படங்களை ஜியோ சினிமா ஆப்பிலும் காணலாம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: