இந்தியாவுக்காக விலையைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்..!

மற்ற நாடுகளைவிட இந்தியாவில் போட்டிக்கு ஏற்ப விலைச் சலுகை அளிக்கும் முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸ் ஈடுபட்டு வருகிறது.

Web Desk | news18
Updated: July 19, 2019, 1:27 PM IST
இந்தியாவுக்காக விலையைக் குறைக்கும் நெட்ஃப்ளிக்ஸ்..!
நெட்ஃப்ளிக்ஸ் (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: July 19, 2019, 1:27 PM IST
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்திய பயனாளர்களுக்காக தனது சந்தா விலையைக் குறைக்க ஆலோசித்து வருகிறது.

சர்வதேச ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக நெட்ஃப்ளிக்ஸ் உள்ளது. இந்தியாவில் தனது பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் நெட்ஃப்ளிக்ஸ் உள்ளது. இதனால் அதிக சந்தாதாரர்களைப் பெற இந்தியாவுக்கான சப்ஸ்க்ரிப்ஷன் என்னும் சந்தா விலையை பாதியாகக் குறைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

விலை குறைக்கப்பட்டால் அனைத்து வீடியோ, திரைப்படம், ஒரிஜினல்ஸ்களைப் பார்க்க முடியுமா அல்லது கட்டுப்பாடுகள் இருக்குமா? என்பது குறித்தான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஒரு மாத காலத்துக்குள் மாத சந்தா விலை 300 ரூபாயாகக் குறைந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களான ஹாட்ஸ்டார் விஐபி, ப்ரீமியம் ஆகியவை முறையே மாதம் ஒன்றுக்கு 365 ரூபாய் மற்றும் 199 ரூபாய் ஆகும். இதேபோல், அமேசான் ப்ரைம் மாத சந்தா 129 ரூபாய் ஆகும். சோனி லைவ் ஆண்டுக்கு 499 ரூபாய், ஜீ 5 ஆண்டுக்கு 999 ரூபாய் என சந்தா வசூலிக்கப்படுகின்றன.

நெட்ஃப்ளிக்ஸ் தற்போது 500, 650 மற்றும் 800 ரூபாய் என மூன்று வகையான கட்டண முறைகளைப் பின்பற்றி வருகிறது. மற்ற நாடுகளைவிட இந்தியாவில் போட்டிக்கு ஏற்ப விலைச் சலுகை அளிக்கும் முயற்சியில் நெட்ஃப்ளிக்ஸ் ஈடுபட்டு வருகிறது.

மேலும் பார்க்க: டிக்டாக்-க்கு போட்டியாக வீடியோ ஷேரிங் ஆப்பை வெளியிடுகிறது ஃபேஸ்புக்..?
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...