சிங்கப்பூர் காவல் துறையினர் பொதுமக்களின் பணத்தைத் திருடக்கூடிய வகையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நடக்கும் ஃபிஷிங் மோசடி குறித்து எச்சரித்துள்ளனர். பயனர்களின் தனிப்பட்ட மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருட முயற்சிக்கும் இந்த புதிய நெட்ஃபிளிக்ஸ் ஃபிஷிங் மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீப காலமாக இது போன்ற டிஜிட்டல் வகை தகவல் திருட்டுகள் அதிகரித்து வருகிறது.
ஒரு மாதத்தில் குறைந்தது ஐந்து பேர் இந்த மோசடியினால் பாதிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். அவர்கள் சுமார் $12,500 டாலர் வரை பணத்தை இழந்துள்ளனர். வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிக்ஸ்லிருந்து சந்தாவைப் புதுப்பிக்கக்கோரி வரும் மின்னஞ்சல் மூலமாக மோசடி நடைபெறுகிறது. மின்னஞ்சலில் சந்தா புதுப்பிக்க URL இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றுவார்கள்" என்று காவல்துறை தெரிவித்தனர்.
இணைப்புகளைக் கிளிக் செய்தவுடன், அவர்கள் ஃபிஷிங் இணையதளங்களுக்குத் திருப்பி விடப்படுவார்கள். அதன் பிறகு அவர்களின் சந்தாவைப் புதுப்பிக்க, அவர்களின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்டுகளை (OTP) உள்ளிடுமாறு அவர்களிடம் கேட்கப்படும். அடுத்து அவர்களின் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய உடன், ஃபிஷிங் மோசடி செய்பவர்கள் விவரங்களைத் திருடி, பாதிக்கப்பட்டவர்களின் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி அதில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்வார்கள்.
நெட்ஃபிளிக்ஸ் போன்ற நம்பகமான தளங்களிலிருந்து வந்ததாகக் கூறும் அத்தகைய மின்னஞ்சல்கள் எதையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று சிங்கப்பூர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். சந்தேகத்திற்கிடமான இணையதள லிங்க் வந்தால், பணம் செலுத்த வேண்டிய தளத்தின் மின்னஞ்சல் டொமைன் சரியானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இது போன்ற மோசடி செய்பவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பயனர்கள் சில பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றலாம். சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளில் வழங்கப்படும் இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது நம்பகமான தளத்தின் மூலம் வரக் கூடிய தகவலின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட அல்லது இணைய வங்கி விவரங்கள் மற்றும் OTP ஐ சரிபார்க்கும் முன் யாருக்கும் அல்லது எந்த இணைப்பிற்கும் அவற்றைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உங்களின் அனுமதி இல்லாமல் உங்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் பரிவர்த்தனைகள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு, இது குறித்து புகார் தெரிவியுங்கள். எப்போதும் டிஜிட்டல் ரீதியான விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை அணுகலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.