ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) உலக அளவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமாகும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு பல வகையான திருத்தங்களை இந்நிறுவனம் அவ்வப்போது செய்து வருகிறது. அந்த வகையில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தலைமை பொறுப்பை தாங்கி வந்திருந்தார். தற்போது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து விலகி, தனது இரு நீண்டகால கூட்டாளிகளான டெட் சரண்டோஸ் மற்றும் கிரெக் பீட்டர்ஸ் ஆகியோருக்கு பதவியை கொடுத்துள்ளார். பல நாடுகளில் பாஸ்வேர்ட் பகிர்வை நிறுத்துவதற்கான திட்டம் உட்பட, நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிய விவரங்களை இவர்கள் இப்போது அறிவித்துள்ளனர்.
புதிய இணை-தலைமை நிர்வாக அதிகாரியான பீட்டர்ஸ், நெட்ஃபிளிக்ஸ் செயலியின் சந்தாதாரர்களில் அதிகமானோர் சேவையைப் பயன்படுத்தினாலும், அதற்கு பணம் செலுத்தாதவர்கள் எதிர்காலத்தில் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தினார். ப்ளூம்பெர்க் உடனான ஒரு நேர்காணலில், ஒழுங்குபடுத்தப்பட்ட பாஸ்வேர்டு பகிர்வு படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த முடிவு அனைவராலும் வரவேற்பைப் பெறாது என்றும், சில கோபமான வாடிக்கையாளர்களை நிறுவனம் சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும் இணை தலைவர்கள் கணித்துள்ளனர். தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூற்றுப்படி, நிறுவனம் அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 மில்லியனாக அதிகரிப்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறது.
மேலும், புது புது தொடர்கள், தரமான படங்கள் மூலமும் மக்களை தன் பக்கம் ஈர்க்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், அதிக படியான புதிய வாடிக்கையாளர்களை பெற முடியும் என்றும், வருமானத்தை பெருக்க முடியும் என்றும் இந்நிறுவனம் நம்புகிறது.
நெட்ஃபிளிக்ஸ் ஒரு புதிய விளம்பர-ஆதரவு முறையை கடந்த நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த விளம்பர முறையின் செயல்திறன் கலவையாக இருந்தது. நெட்ஃபிளிக்ஸ் அதன் முதல் மாதத்தில் குறைந்த பிரபலமான திட்டங்களை கொண்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய முறை அதன் பதிவுகளில் அதிக படியான பங்கை ஏற்படுத்தியது. மேலும், இந்த ஆண்டில் இந்த பங்கின் மடங்கை அதிகரிக்க கூடிய வழிகளை செய்து வருகிறது.
நெட்ஃபிளிக்ஸ் அதன் முன்னேற்றத்தில் திருப்தியை வெளிப்படுத்தி வருகிறது மற்றும் இதன் விளம்பர முறை புதிய, செலவு உணர்வுள்ள வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது என்று இந்நிறுவனம் கூறுகிறது. விளம்பர முறையை தேர்ந்தெடுக்கும் பெரும்பான்மையான நபர்கள் புதிய வாடிக்கையாளர்களே தவிர, அதிக விலையுள்ள திட்டங்களை கொண்ட நபர்கள் அல்ல என்று நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த விளம்பர முறை பல வாடிக்கையாளர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இதை இந்நிறுவனம் எப்படி சமாளிக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology