உலக அளவில் பிரபலமான ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் கடந்த சில மாதங்களாகவே சப்ஸ்கிரைபர்கள் விஷயத்தில் சறுக்கி வருகிறது. இதனையடுத்து சப்ஸ்கிரைபர்களை அதிகரிப்பதற்காக நெட்ஃபிளிக்ஸ் குறைந்த கட்டணம் கொண்ட புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த குறைந்த கட்டண திட்டத்தில் சப்ஸ்கிரைபர்கள் ஷோக்களை கண்டு ரசிக்கலாம், அதே சமயம் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக விளம்பரங்களை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் நெட்ஃபிளிக்ஸ் கரம் கோர்த்துள்ளது. இதன் மூலம் மைக்ரோசாஃப்ட் மூலமாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகும் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியாகின.
இதனையடுத்து நெட்ஃபிளிக்ஸ் நீண்ட காலமாக குற்றச்சாட்டி வரும் ஒரு முக்கிய பிரச்சனையை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதாவது சப்ஸ்கிரைபர்கள் தங்கள் நெட்ஃபிக்ஸ் பாஸ்வேர்டை (password) மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே வருவாய் இழப்புக்கு காரணம் என நெட்ஃபிக்ஸ் தெரிவித்து வருகிறது. அதேபோல் சப்ஸ்கிரைபர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்களது பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.பாஸ்வோர்டை பகிரும் பயனர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அம்சத்தை நெட்ஃபிக்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிட்டது.
தற்போது நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வை தடுக்க புதிய வழியை சோதித்து வருகிறது. நிறுவனம் சமீபத்தில் சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெருவில் வசிக்கும் சப்ஸ்கிரைபர்களுக்கு "கூடுதல் உறுப்பினரைசேர்" (Add extra member) என்ற விருப்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தில் உங்கள் நெட்ஃபிளிக்ஸ் கணக்கை வீட்டிற்கு வெளியே உள்ளவர்கள் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும். இத்திட்டம் இதுவரை இந்தியாவில் இல்லாமல் இருந்தது. தற்போது இந்தியாவில் உள்ள சப்ஸ்கிரைபர்களுக்காக “இல்லத்தை இணை” (Add a home) என்ற ஆப்ஷனை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
also read : ஃபேஸ்புக்கில் 10,000 குரூப் அட்மின்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது அமேசான் நிறுவனம்.. ஏன் தெரியுமா?
அர்ஜென்டினா, டொமினிகன் குடியரசு, எல் சால்வடார், குவாத்தமாலா மற்றும் ஹோண்டுராஸ் உள்ளிட்ட நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் புதிய ஆப்ஷனை சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக நெட்ஃபிளிக்ஸ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், தனது அனைத்து வாடிக்கையாளர்களும் பாஸ்வேர்ட் பகிர்விற்கு கட்டணம் செலுத்தும் திட்டத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய அம்சத்தின் கீழ் வேறொரு வீட்டில் உங்கள் Netflix கணக்கைப் பயன்படுத்த யாரையாவது அனுமதிக்க விரும்பினால், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அர்ஜென்டினாவில் கூடுதலாக 219 பெசோக்கள் மற்றும் பிற சோதனைப் பகுதிகளில் $2.99 செலுத்துவதன் மூலம் உங்கள் கணக்கை பிறர் பயன்படுத்த முடியும். இதுவரை இந்தியாவில் பாஸ்வேர்ட் பகிர்விற்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Netflix