ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Netflix செய்யும் அதிரடி மாற்றங்கள்... இனி இந்த ஆப்ஷனுக்கு வாய்ப்பு இல்ல ராஜா

Netflix செய்யும் அதிரடி மாற்றங்கள்... இனி இந்த ஆப்ஷனுக்கு வாய்ப்பு இல்ல ராஜா

நெட்ஃபிலிக்ஸ்

நெட்ஃபிலிக்ஸ்

Netflix | நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர முடியாது, வெவ்வேறு இடங்களில் ஒரே கணக்கை லாகின் செய்ய முடியாது என்று நெட்ஃபிலிக்ஸ் சில வாரங்களுக்கு முன்பே புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பை மேற்கொண்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  உலகின் மிகப்பெரிய முன்னணி ott நிறுவனங்களில் ஒன்று நெட்ஃபிலிக்ஸ். இந்தியாவைப் பொறுத்தவரை, நெட்ஃபிலிக்ஸ் சந்தா விலை அதிகமாக இருப்பதால், வேறு தளங்களை இந்திய OTT யூசர்கள் விரும்புகிறார்கள். இந்தியாவில் ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பலர் பயன்படுத்தும் வழக்கம் இன்று வரை இருந்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டை பகிர முடியாது, வெவ்வேறு இடங்களில் ஒரே கணக்கை லாகின் செய்ய முடியாது என்று நெட்ஃபிலிக்ஸ் சில வாரங்களுக்கு முன்பே புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து தற்பொழுது ப்ரொஃபைல் டிரான்ஸ்ஃபர் என்ற ஒரு புதிய அம்சத்தை நெட்ஃபிலிக்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

  ப்ரொஃபைல் டிரான்ஸ்ஃபர் அம்சம் இருக்கும் நெட்ஃபிலிக்ஸ் கணக்குகள் தங்களுடைய பாஸ்வேர்டை பகிர முடியாது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்

  பாஸ்வேர்டு பகிரும் யூசர்கள், தடுக்கும் முயற்சியில் நெட்ஃபிலிக்ஸ்

  நெட்ஃபிலிக்ஸ் பார்க்க விரும்புபவர்கள் மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. ஆனால் சந்தா விலை காரணமாக எல்லோராலும் நெட்ஃபிலிக்ஸ் கணக்குக்கு சப்ஸ்க்ரைப் செய்ய முடிவதில்லை. இதனால் தான் நெட்ஃபிலிக்ஸ் கணக்குகள் பகிரப்பட்டு வருகின்றன.

  யூசர்களுக்கு சந்தா விலை என்பது ஒரு பிரச்சனையாக இருக்கும்பொழுது, நெட்ஃபிலிக்ஸ் கணக்குகள் பாஸ்வேர்டுகள் பகிரப்படுவது, ஒரே கணக்கை பலர் பயன்படுத்துவது நெட்ஃபிலிக்ஸ்க்கும இந்தியாவில் அடிப்படை பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. மேலும் தன்னுடைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு இவ்வாறு பாஸ்வேர்ட் பகிர்வு தான் பிரச்சனை என்று நெட்ஃபிலிக்ஸ் ஒரு வெளியிட்ட ஒரு அறிக்கையிலும் தெரிவித்துள்ளது.

  நெட்ஃபிலிக்ஸ் தனது வலைப்பதிவில் “நாங்கள் ப்ரொஃபைல் டிரான்ஸ்ஃபர் என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்கிறோம். இதைப் பயன்படுத்தும் நபர்களுக்கு, உங்கள் கணக்கை ப்ரொஃபைலை டிரான்ஸ்பர் செய்ய முடியும். அவ்வாறு செய்யும் போது, எந்த திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களை பார்த்திருக்கிறீர்கள், பரிந்துரைகள், லிஸ்ட், நீங்கள் சேமித்த கேம் மற்றும் அமைப்புகள் ஆகிய அனைத்துமே அனுப்பப்படும். இந்த அம்சம் உலகம் முழுவதிலுமுள்ள நெட்ஃபிலிக்ஸ் யூசர்களுக்கு அப்டேட் வழியாக அனுப்பப்பட்டிருக்கும் என்று உள்ளது.

  பாஸ்வேர்ட் பகிர்வதற்கும் ப்ரொஃபைல் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் யோசிக்கலாம்.

  நீங்கள் ஒரு நபருக்கு உங்கள் நெட்ஃபிலிக்ஸ் கணக்கின் பாஸ்வேர்டு கொடுத்தால் அவர் அதை எத்தனை நபர்களுக்கு வேண்டுமானாலும் பகிரலாம். ஆனால் ப்ரொஃபைல் டிரான்ஸ்ஃபர் என்பது கணக்கு வைத்திருக்கும் நபர் மட்டும் தான் மற்றொரு நபருக்கு அதை பகிர முடியும். இதன் மூலம் ஒரு கணக்கை எத்தனை நபர்கள் பயன்படுத்தலாம் என்ற வரையறை விதிக்கப்பட்டுள்ளது.

  ஏற்கனவே அனைத்து கணக்குகளுக்குமே இந்த அறிவிப்பு வந்திருக்கும். இல்லையென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான நோட்டிஃபிகேஷன் கிடைக்கும். நீங்கள் பதிவு செய்திருக்கும் மின்னஞ்சலில் கிடைக்கும். இந்த அப்டேட்டை இன்ஸ்டால் செய்த பிறகு நெட்ஃபிலிக்ஸ் செயலி அல்லது பிரௌசரில் லாகின் செய்து டிரான்ஸ்ஃபர் ப்ரொஃபைல் என்ற ஐகானை கிளிக் செய்து அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்களுடைய கணக்கை வேறு ஒரு நபருக்கு நீங்கள் அனுப்பலாம்.

  Read More: குறைந்த விலையில் நெட்பிளிக்ஸின் புதிய “Basic with ads” பிளான்! இந்தியாவிற்கு எப்போது கிடைக்கும்?

  நெட்ஃபிலிக்ஸ் கடந்த சில மாதங்களாக லட்சக்கணக்கான யூசர்களை இழந்து வந்துள்ளது. அதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற முயற்சியில் பலவித மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த டிரான்ஸ்ஃபர் அம்சத்தைத் தொடர்ந்து, விளம்பரங்களுடன் கூடிய மலிவு விலையில் புதிய சந்தா திட்டங்களை நெட்ஃபிலிக்ஸ் வழங்க இருக்கிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Netflix