ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Tudum என்ற புதிய வெப்சைட்டை அறிமுகப்படுத்திய Netflix!

Tudum என்ற புதிய வெப்சைட்டை அறிமுகப்படுத்திய Netflix!

 Netflix

Netflix

Netflix-ன் இந்த புதிய வெப்சைட் செய்திகள், நேர்காணல்கள், திரைக்கு பின்னால் உள்ள வீடியோக்கள் (behind-the-scenes videos) , போனஸ் அம்சங்கள் மற்றும் பலவற்றை வழங்குவதை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உலகின் மிக பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் Tudum என்ற பெயரில் தனது புதிய வெப்சைட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. Netflix-ன் இந்த புதிய வெப்சைட் செய்திகள், நேர்காணல்கள், திரைக்கு பின்னால் உள்ள வீடியோக்கள் (behind-the-scenes videos) , போனஸ் அம்சங்கள் மற்றும் பலவற்றை வழங்குவதை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய வெப்சைட்டை நிறுவனம் " உங்கள் Netflix ஆர்வங்களை பற்றி மேலும் அறிய ஒரு இடம்" (a place to learn more about your Netflix interests) என்று விவரித்து உள்ளது.

Strong Black Lead, Geeked, Netflix Is a Joke, Con Todo மற்றும் Most போன்ற பல வெப்சைட்களை நெட்ஃபிளிக்ஸ் ஏற்கனவே கொண்டுள்ளது. இந்நிலையில் Tudum வெப்சைட்டின் அறிமுகம் பற்றி ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ள Netflix நிறுவனம், "Tudum-க்கு ஹலோ சொல்லுங்கள். நெட்ஃபிளிக்ஸ் படங்கள், சீரிஸ்கள் மற்றும் நீங்கள் விரும்பும் ஸ்டார்களை பற்றி இது ஆழமாக ஆராய உதவும். இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. ஆனால் நீங்கள் பிரத்தியேக நேர்காணல்கள், பிஹைண்ட் தி சீன்ஸ் வீடியோஸ், போனஸ் அம்சங்கள் மற்றும் பலவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம்," என்று அந்த ட்வீட்டில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் Tudum வெப்சைட்டானது தங்களின் "அதிகாரப்பூர்வ துணை தளம்" (official companion site) என்று நெட்ஃபிளிக்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

இப்போது உலகம் முழுவதும் அணுகக்கூடியதாக இருக்கும் இந்த புதிய வெப்சைட் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் சமீபத்தில் Tudum என்ற பெயரில் ஒரு ரசிகர் நிகழ்வை (fan event) நடத்தியது நினைவிருக்கலாம். Tudum வெப்சைட்டிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றிய ஒரு மேலோட்டப் பார்வை அடங்கிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், யூஸர்கள் Netflix சீரிஸ்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருந்து கதைகளை பெறலாம் என குறிப்பிட்டுள்ளது.

அதே போல ஒரு சீரிஸ் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட, நடிகர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் உள்ளிட்ட அப்டேட்களை பற்றிய கூடுதல் தகவலுக்கு டீப் சர்ச் உள்ளிட்ட ஆப்ஷன்களையும் பெறும் என தெரிகிறது. நெட்ஃபிளிக்ஸின் தகவலின் படி யூஸர்கள் அதன் கன்டென்டை மேலும் ஆராய்ந்து வெப்சைட்டை பயன்படுத்தி 'Maid' உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டதா அல்லது 'The Witcher' நடிகர்கள் மற்ற ஷோக்களில் தோன்றியுள்ளார்களா என்பதை எல்லாம் கண்டறிந்து கொள்ள முடியும்.

ALSO READ |  இந்தியாவில் எங்களது ப்ரீ-ஓன்ட் கார் சேல்ஸ் இரட்டிப்பாகும்.! வோக்ஸ்வாகன் நிறுவனம் நம்பிக்கை

நெட்ஃபிளிக்ஸ் கடந்த மாதம் அதன் சிறந்த சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களின் வியூவர்ஷிப்களை ற்றி மிகவும் வெளிப்படையாக இருக்க, அதன் மிகவும் பிரபலமான டிவி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களை விவரிக்கும் வாராந்திர அறிக்கையை வெளியிட தொடங்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய டைட்டில்கள் மெகா ஹிட் ஆவதால், கடந்த மாதம் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஒட்டுமொத்த பட்டியல்களையும் அப்டேட் செய்வதாக நெட்ஃபிளிக்ஸ் கூறியது. இந்தப் பட்டியல்கள் total hours viewed in a title's first 28 days on Netflix எற அடிப்படையில் அமைந்தவை.

எங்கள் நிறுவனம், எங்களுடன் இணைந்து பணிபுரியும் படைப்பாளிகள் மற்றும் எங்கள் உறுப்பினர்களுக்கு இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று Netflix கூறி இருக்கிறது. ஸ்ட்ரீமிங் உலகில் வெற்றி என்றால் என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த பட்டியல்கள் எங்கள் துறையில் அந்த கேள்விக்கு தெளிவான பதிலை வழங்குகின்றன என்று Netflix நிறுவனம் கூறி இருக்கிறது. மொத்தத்தில் Tudum மூலம் நடிகர்களின் விவரங்கள், நிஜ வாழ்க்கை கதைகள், நேர்காணல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய விவரங்களை இன்னும் அதிகமாக யூஸர்கள் தேடி தெரிந்து கொள்ளலாம்.

First published:

Tags: Netflix