Home /News /technology /

அதிரடியாக சந்தா கட்டண விலையை குறைத்த நெட்பிளிக்ஸ் - புதிய அறிவிப்புகள் இதோ!

அதிரடியாக சந்தா கட்டண விலையை குறைத்த நெட்பிளிக்ஸ் - புதிய அறிவிப்புகள் இதோ!

நெட்ஃப்ளிக்ஸ்

நெட்ஃப்ளிக்ஸ்

விலையை குறைப்பதால் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான புதிய பார்வையாளர்கள் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு வர தொடங்குவார்கள் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம்.

சினிமா ரசிகர்களுக்கு எந்நேரமும் சினிமா சார்ந்த உலகிலேயே இருக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதும் இருக்கும். முன்பெல்லாம் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்ற படங்களை ஒரு நாளைக்கு பல முறை பார்த்து ரசிப்பார்கள். பின்னர் ஓடிடி தளங்கள் தொடங்கிய நாட்களில் இருந்தே பல்வேறு விதமான திரைப்படங்கள், சீரிஸ், டாக்குமெண்டரி போன்ற ஏராளாமான தொகுப்புகளை நாம் இருக்கும் இடத்திலியேயே பார்க்க முடிந்தது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த பிறகு ஓடிடி தளங்களின் ஆதிக்கம் பெருகியது. வீட்டில் இருந்தே பல வகையான படங்கள் மற்றும் சீரிஸ்களையும் பார்ப்பதற்கு ஓடிடி தளம் உதவியது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், சோனி லைவ் போன்ற ஓடிடி தளங்கள் தான் இந்தியாவில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு முன்னர் இந்த தளங்களில் சந்தா கட்டணம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் உலகில் அதிக பேர் பயன்படுத்தும் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் திடீரென ஒரு அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி முன்பிருந்த சந்தா கட்டண விலைகள் பலவும் குறைந்துள்ளது. முன்பு ஒரு மாத நெட்பிளிக்ஸ் சந்தா கட்டணமாக ரூ.199 இருந்தது. தற்போது இது ரூ.149 ஆக குறைந்துள்ளது. இதுவே ஒரு மாதத்திற்கான ஆரம்ப கட்டணமாகவும் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பல கோடி மக்களை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு கொண்டு வருவதற்காகவே இந்த புதிய அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதுபோன்று விலையை குறைப்பதால் இந்தியாவில் இருந்து அதிக அளவிலான புதிய பார்வையாளர்கள் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு வர தொடங்குவார்கள் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். எனவே, இதனால் ஒரு மாத சந்தா கட்டணமாக முன்பிருந்த ரூ.199 மொபைல் பிளான் ரூ.149 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் டிவி, மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களில் பார்ப்பதற்கு ரூ.499 ஒரு மாத சந்தா கட்டணமாக இருந்தது. ஆனால் தற்போது இதன் விலை பெரிய அளவில் குறைக்கப்பட்டு ரூ.199 ஆக உள்ளது.

மேலும் முன்பிருந்த மாத சந்தா (Standard) கட்டணமான ரூ.649 பிளான் ரூ.499 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று பிரீமியம் சந்தா கட்டணமாக இருந்த ரூ.799 குறைந்து ரூ.649 ஆக உள்ளது. இதன் மாத சந்தா கட்டணமாக உள்ள ரூ.149 பிளானை பயன்படுத்துவோர் மொபைல் மற்றும் டேப்லட்டில் 480p ரிசோலியூசனில் பார்க்க முடியும். இந்த பிளானில் ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தில் மட்டும் பயன்படுத்த முடியும். அதே போன்று ரூ.199 பிளானை 480p ரிசோலியூசனில் பார்க்க முடியும்,

இருப்பினும் இந்த பிளான்படி மொபைல், லேப்டாப் மற்றும் டிவியிலும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ரூ.499 சந்தா திட்டத்தை பயன்படுத்தி 1080p ரிசோலியூசனில் பார்க்க முடியும். இதில் 2 சாதனங்கள் வரை பயன்படுத்தலாம். மொபைல், டேப்லட், லேப்டாப் மற்றும் டிவியிலும் இந்த பிளானை பயன்படுத்தி பார்க்கலாம். அதே போன்று ரூ.649 பிரீமியம் பிளானை பயன்படுத்தி 4 சாதனங்களில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.

Also read... பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவி இலவச சப்ஸ்க்ரிப்ஷன் பெற வேண்டுமா?

இதில் 4k ரிசோலியூசனில் பார்க்கலாம். இதிலும் மொபைல், டேப்லட், லேப்டாப் மற்றும் டிவியிலும் பார்க்கலாம். இந்த அதிரடி விலை குறைப்பு அறிவிப்பால் மற்ற ஓடிடி தளங்களின் சந்தாதாரர்களும் நெட்பிளிக்ஸை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் நெட்பிளிக்ஸ் போன்று இந்தியாவில் அதிக பேர் பயன்படுத்தும் அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், சோனி லைவ் போன்ற பல ஓடிடி தளங்களின் சந்தா கட்டணத்தை விடவும் நெட்பிளிக்ஸின் கட்டணம் இந்த அறிவிப்பின் மூலம் மிகவும் குறைந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Netflix

அடுத்த செய்தி