• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபில் கடும் சரிவு - முதலீட்டாளர்கள் கவலை!

நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபில் கடும் சரிவு - முதலீட்டாளர்கள் கவலை!

நெட்ஃபிலிக்ஸ்

நெட்ஃபிலிக்ஸ்

கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை சுமார் 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்ற நெட்பிளிக்ஸ், கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற மிக குறைவான சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை எனத் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வீடியோ ஸ்டீரீமிங் தளமான நெட்பிளிக்ஸை சப்ஸ்கிரைப் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் வீடியோ ஸ்டீரீமிங் தளமான நெட்பிளிக்ஸ் அபார வளர்ச்சியை சந்தித்தது. எதிர்பார்ப்புக்கு மீறிய வளர்ச்சியை சந்தித்த அந்த நிறுவனம் மீண்டும் குறைவான வளர்ச்சிப் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை சுமார் 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்ற நெட்பிளிக்ஸ், கடந்த 3 ஆண்டுகளில் பெற்ற மிக குறைவான சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை எனத் தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் நிறுவனம் எதிர்பார்த்ததற்கு மாறாக 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய சரிவு என்றும் கூறப்படுகிறது.

ஏனென்றால், கடந்த ஆண்டு இந்த நேரத்தில் 16 மில்லியன் புதிய சப்ஸ்கிரைபர்கள் கிடைத்த நிலையில், தற்போது வெறும் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே கிடைத்தது, முதலீட்டாளர்களுக்கு கவலையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா லாக்டவுன் உலகம் முழுவதும் இருந்ததால் மக்கள் வீட்டில் முடங்கியிருந்தனர். இதனால், பலரும் வீடியோ கேம், தொலைக்காட்சி மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற சீரியஸ்களில் மூழ்கியிருந்தனர். இதனால், ஆன்லைன் வீடியோ ஸ்டீரீமிங் தளங்களை சப்ஸ்கிரைப் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்தது.

ஆனால், இரண்டாவது காலாண்டு தொடங்கியிருக்கும் இந்த சூழலில் இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் குறைவாக மட்டுமே புதிய சப்ஸ்கிரைப்கள் நெட்பிளிக்ஸ் தளத்துக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் 10 மில்லியன் சப்ஸ்கிரைப்கள் கிடைத்த நேரத்தில் இந்த ஆண்டு இவ்வளவு குறைவாக வளர்ச்சி இருப்பது குறித்து நெட்பிளிக்ஸ் டீம் மீளாய்வு செய்து வருகிறது. எதிர்பார்ப்புக்கு மேல் வருமானம் கிடைத்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவிதமாக கலக்கம் உருவாகியுள்ளது. இதனால் பங்குச்சந்தையில் 8 விழுக்காட்டுக்கு மேல் நெட்பிளிக்ஸின் பங்கு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் நெட்பிளிக்ஸின் ஒவ்வொரு ஷேரும் இரட்டிப்பு வளர்ச்சியை பெற்றன. வருவாய் சுமார் 24 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து, 1.7 பில்லியனில் இருந்து 7.16 பில்லியனாக மாறியது. திடீர் சரிவு குறித்து ஆய்வு செய்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், அமெரிக்காவில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டதை காரணமாக முன்வைத்துள்ளது. தடுப்பூசி கிடைத்துவிட்டதால் பலரும் வழக்கும்போல் தங்களது வேலைகளை நோக்கி கவனத்தை திருப்பியிருப்பதாகவும், இதனால் நெட்பிளிக்ஸின் வளர்ச்சி மற்றும் வருவாய் குறைவான வளர்ச்சியை நோக்கி தள்ளப்பட்டுள்ளதாகவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

Also read... மெசஞ்சருடன் இணையும் வாட்ஸ் அப் - பேஸ்புக்கின் அடுத்த அப்டேட்!

கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 37 மில்லியன் புதிய சப்ஸ்கிரைப்கள் உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸூக்கு கிடைத்துள்ளது. இந்த திடீர் சரிவால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விலை குறைப்பு மற்றும் பல்வேறு சலுகைகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஸ்காட் கெல்சர் கணித்துள்ளார். இதனை செய்யாவிட்டால் குறைவான வளர்ச்சி விகிதம் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, முதலீட்டாளர்களை பொறுமை காக்குமாறு நெட்பிளிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது. 2வது காலாண்டு அல்லது ஆண்டு இறுதியில் எதிர்பார்த்த வளர்ச்சியை நிறுவனம் எட்டும் என்றும் நெட்பிளிக்ஸ் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டிஸ்னி, ஆப்பிள் மற்றும் எச்.பி.ஓ போன்ற மற்ற வீடியோ தளங்களும் நெட்பிளிக்ஸூக்கு கடும் சவாலை கொடுத்துவருவது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை கணிசமாக பாதித்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் உலகளவில் 208 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் நெட்பிளிக்ஸ் முதல் இடத்தில் உள்ளது. மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் நெட்பிளிக்ஸ் கூறியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: