ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நெட்ஃபிலிக்ஸ் 25% சந்தாதாரர்களை விரைவில் இழக்கும் - அறிக்கை!

நெட்ஃபிலிக்ஸ் 25% சந்தாதாரர்களை விரைவில் இழக்கும் - அறிக்கை!

நெட்ஃபிலிக்ஸ்

நெட்ஃபிலிக்ஸ்

Netflix |நெட்ஃபிலிக்ஸ் விரைவில் தனது சந்தாதாரர்களில் 25% இழக்க நேரிடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.11

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் முன்னணி ஓடிடி தளமாக திகழ்ந்து வரும் நெட்ஃபிளிக்ஸ், சமீப காலமாக கொஞ்சம் தடுமாறி வருகிறது. மற்ற ஓடிடி தளங்களைவிட நெட்ஃபிளிக்ஸ் சந்தா கட்டணம் அதிகமாக இருப்பதால், இந்தியா போன்ற நாடுகளில் காலூன்ற முடியவில்லை. ஏற்கனவே, ஆட்குறைப்பு, சந்தா கட்டணம் அதிகரிப்பு பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நெட்ஃபிலிக்ஸ் விரைவில் தனது சந்தாதாரர்களில் 25% இழக்க நேரிடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளம் பலரும் விரும்பி பார்க்கும் பல விதமான சீரிஸ்களையும் திரைப்படங்களையும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. வெளிப்புறத்தில் நெட்ஃபிளிக்ஸ்ம் நீண்ட கால வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் படங்களையும் சீரிஸ்களையும் வழங்கி வந்தாலும், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உண்மையில் தன்னுடைய சந்தாதாரர்களை அதிகரிக்கும் முயற்சியில் கொஞ்சம் தடுமாறித்தான் வருகிறது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் அதாவது ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள்ளேயே கிட்டத்தட்ட 12 லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை பற்றி வெளியாகியுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஸ்ட்ரீமிங் பழக்கங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதைப் பற்றி ஆய்வில் கூறப்படுள்ளன.

Read More : இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு வழங்கிய இன்ஸ்டாகிராம்... காரணம் என்ன?

இந்த ஆய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். இதில் சராசரியாக, ஒரு நபர் நான்கு தளத்திற்கு சந்தா செலுத்துகிறார் என்றும், தாங்கள் விரும்பும் பொழுது சந்தாவை ரத்து செய்யும் விருப்பம் இருக்கும் தளத்தையே தேர்வு செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள், விலை அதிகமுள்ள ஓடிடி தளத்திற்கு சந்தா செலுத்த விரும்பவில்லை என்பதை தெரிவித்திருக்கின்றனர்.

இந்தியாவில்தான் நெட்ஃபிலிக்ஸ் விலை அதிகமாக இருக்கிறது, அதனால் பலரும் சந்தா செலுத்துவதில்லை என்ற சூழல் இருக்கிறது. ஆனால் அமெரிக்காவிலும் இதே நிலைதான் உள்ளது. அமெரிக்காவில் மற்ற ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் ஒப்பிடும் போது சராசரியாக நெட்ஃப்ளிக்ஸின் சந்தா விலை அதிகமாகத்தான் இருக்கிறது.

அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே மிகவும் பிரபலமான ஓடிடி தளமாகத்தான் திகழ்ந்து வருகிறது. ஐந்தில் நான்கு நபர்கள் நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தா செலுத்தியவர்களில் 70 சதவிகிதத்தினர் நெட்பிளிக்ஸை உண்மையாகவே பயன்படுத்துகிறார்கள், அதாவது நெட்ஃபிளிக்ஸில் திரைப்படங்களையும் வெப் சீரிஸ்களையும் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதும் முக்கியமானது.

இவ்வளவு பிரபலமாக இருந்தாலுமே பல நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சந்தாவை ரத்து செய்ய விரும்புகிறார்கள். நெட்ஃபிளிக்ஸ் சந்தாவின் விலை தான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மூன்றில் ஒரு நபர், தாங்கள் விரும்பும் சீரியல்களும், சீரிஸ்களும், திரைப்படங்களும் நெட்ஃபிளிக்ஸில் இல்லை என்பதால் , அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். நெட்ஃபிளிக்சிற்கு உண்மையிலேயே இது மிகப்பெரிய சவாலாகத் தான் இருக்கும். விலை குறைத்து, வாடிக்கையாளர்கள் விரும்பும் சேவைகளையும் சேர்த்து வழங்கும் திட்டத்தை நெட்ஃபிலிக்ஸ் எவ்வாறு நிறைவேற்றுகிறது என்று பார்க்கலாம்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Entertainment, Netflix