சர்வதேச அளவில் மிக பிரபலமாக உள்ள ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், சமீப மாதங்களில் ஏராளமான சப்ஸ்கிரைபர்களை இழந்த பிறகு விளம்பரங்களை அறிமுகப்படுத்தவும், ஒரே லாகின் பாஸ்வேர்டை பலர் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை விரைவில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒரு புதிய அறிக்கையின்படி, மிக விரைவில் நெட்ஃபிளிக்ஸ் யூஸர்கள் பெரிய திரையில் விளம்பரங்களை பார்க்க தொடங்குவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மான நெட்ஃபிளிக்ஸ் விளம்பரங்களை அறிமுகப்படுத்துவதற்கான அதன் திட்டங்களை வேகமாக முடுக்கி விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நெட்ஃபிளிக்சின் முக்கிய அதிகாரிகள் சிலர், 2022-ஆம் ஆண்டு இறுதிக்குள் விளம்பரங்கள் வரலாம் என நிறுவனத்தின் மேலிடம் தங்களிடம் தகவல் தெரிவித்துள்ளதாக கூறி இருக்கிறார்கள்.
ஸ்ட்ரீமிங் மார்கெட்டில் ஒரு பெரிய மாற்றத்தை கண்டுள்ள Netflix, அதன் சமீபத்திய வணிக முடிவுகள் மற்றும் அதன் உத்தியை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சிறந்த வருவாய் வாய்ப்புகளுக்காக விளம்பரங்களைக் கொண்டு வருவது பற்றியும், மக்கள் தங்கள் Netflix அக்கவுண்ட்டை மற்றவர்களுடன் ஷேர் செய்து கொள்ளும் முறையை மாற்றுவது பற்றியும் நிறுவனத்தின் தலைவர் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்ட்ரீமிங் நிறுவனமான Netflix-ன் வருவாயை பல ஆண்டுகளாக பாதித்து வரும் பாஸ்வேர்ட் ஷேரிங்கை தடுக்க அல்லது கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை எடுக்க தயாரிக்கி வருவதாகவும், நடப்பாண்டில் 3 மாதங்களுக்குள் யூஸர்களின் ஸ்கிரீனில் விளம்பரங்களைக் கொண்டு வர Netflix தயாராகி வருவதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Also Read : IRCTC ரயில் டிக்கெட் ஆன்லைன் முன்பதிவில் அதிரடி மாற்றம்; புதிய புக்கிங் முறை இதோ!
தற்போது Netflix யூஸர்கள் டபுள் ஸ்கிரீன் அக்சஸை பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட சிலருக்கு தங்கள் அக்கவுண்ட் மற்றும் லாகின் விவரங்களை ஷேர் செய்து கொண்டுள்ளனர். எனவே இது போன்ற யூஸர்களுக்கு ஒரு சிறிய அணுகல் கட்டணத்துடன் கூடிய கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான விரிவானதகவல்கள் வரும் மாதங்களில் விரிவாக வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் Netflix வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்ப அதன் பிளான்களை கஸ்டமைஸ் செய்து உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளை விட மேலை நாடுகளில் தொடர்ந்து அதிக கட்டணம் வசூலித்து வருகிறது Netflix. ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் மார்க்கெட்களில் வளர்ச்சி திறன் மற்றும் வாடிக்கையாளர் புள்ளிவிவரங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றன.
எனவே Netflix அதன் ஸ்ட்ரீமிங் பிளான்களை நம் நாட்டில் மாதம் ஒன்றுக்கு ரூ.149 என்ற விலையில் வழங்குகிறது. எனினும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒரு சர்வதேச ஸ்ட்ரீமிங் நிறுவனம், யூஸர்களை ஈர்க்க வித்தியாசமான சலுகைகளை வழங்க வேண்டும். விளம்பரங்களை அறிமுகப்படுத்துவது ஓரளவு வருவாயை ஈட்ட உதவும், என்றாலும் ஏற்கனவே இருக்கும் யூஸர்களை தக்க வைத்து கொள்வதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.