ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Netflix : மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தியும் எண்ணிக்கை சரிவில் திணறும் நெட்ஃபிக்ஸ்!

Netflix : மலிவு விலை திட்டங்களை அறிமுகப்படுத்தியும் எண்ணிக்கை சரிவில் திணறும் நெட்ஃபிக்ஸ்!

எண்ணிக்கை சரிவில் திணறும் நெட்ஃபிக்ஸ்!

எண்ணிக்கை சரிவில் திணறும் நெட்ஃபிக்ஸ்!

மேக்ரோ பொருளாதார நிலைமைகள், பணவீக்கம் மற்றும் உற்பத்திக்கான நிதியளிப்பு செலவுகள் ஆகியவை அதன் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை அடைய அதிக ஸ்ட்ரீமிங் தளத்தை போராடச் செய்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

நெட்ஃபிக்ஸ் சந்தாவை வைத்திருப்பது ஒரு ஆடம்பரமாக இருந்த நாட்கள் மாறி அநேகர்கள் கைகளில் நெட்ஃபிக்ஸ் சரளமாக ஓடி வருகிறது. ஆனால் மேலும் பல புதிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக அறிமுகப்படுத்திய விளம்பரங்களுடன் கூடிய மலிவு விலை பிளான் தோல்வியடைந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெட்ஃபிக்ஸ் தொடங்கப்பட்ட காலத்தில் பெரும் வரவேற்பையும் நல்ல வருமானத்தையும் பெற்று வந்தது. ஒரே OTT தளமாக இருந்த போது ராஜா போல் உலா வந்தது. அதன்பின்னர் நெட்ஃபிக்ஸுக்கு போட்டியாக அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற புதிய OTT தளங்கள் உருவானது. இதனால் நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தால் பெரிய பயனர் எண்ணிக்கைகளை அடைய முடியவில்லை.

அதனால் புதிய பல திட்டங்களை கொண்டு வந்தது. மாத சந்தா தொகைகளில் மாற்றம், பயன்படுத்தும் சாதனங்களின் எண்ணிக்கையில் மாற்றம், முதன் பயனாளர் சந்தாத்தொகை என்று புதிது புதிதாக கொண்டு வந்தது. இதனால் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

அந்த சந்தா தொகையும் கட்ட முடியாத மக்கள் கூட்டத்தையும் தன்  பக்கம் இழுப்பதற்காக நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து நெட்ஃபிக்ஸ்  விளம்பரங்களுடன் கூடிய மலிவு விலை சந்தாவை அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் ஒரு மாதத்திற்கு $6.99 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Netflix இன் புதிய அடிப்படை திட்டம்  ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவில் கிடைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது. டிவி மற்றும் மொபைல் சாதனங்களில் அணுக அனுமதி அளித்தது.

இந்தியப் பயனர்களுக்கு, Netflix ஆனது ரூ.149க்கு மொபைலை மையமாகக் கொண்ட திட்டத்தை வழங்குகிறது. இது இந்தியாவில் கிடைக்கும் மலிவான Netflix திட்டமாகும். மேலும் ஃபோன் அல்லது டேப்லெட்டில் 480p ஸ்ட்ரீமிங்குடன் நிலையான வீடியோ தரத்தில்  வழங்குகிறது. இந்தத் திட்டம் ஒரு நேரத்தில் ஒரு சாதனத்தை மட்டுமே Netflix ஐ அணுக அனுமதிக்கிறது.

ஆனால் இது எதிர்பார்த்த எண்ணிக்கையிலான மக்களை தன பக்கம் இழுக்கத் தவறியுள்ளது. நெட்ஃபிக்ஸ் அதிக சந்தாதாரர்களை வைத்திருக்கவும் பெருக்கவும் போராடி வருகிறது. மேக்ரோ பொருளாதார நிலைமைகள், பணவீக்கம் மற்றும் உற்பத்திக்கான நிதியளிப்பு செலவுகள் ஆகியவை அதன் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை அடைய அதிக ஸ்ட்ரீமிங் தளத்தை போராடச் செய்கின்றன.

ஒரு வருடத்திற்கு முன்பு 8.3 மில்லியன் சந்தாதாரர்களைச் சேர்த்தது. அனால் தற்போது 4.3 மில்லியன் சந்தாதாரகளை சேர்பதற்கே போராடி வருகிறது. இது 2014 முதல் விடுமுறைக் காலத்திற்கான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும் என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை  கூறுகியது.

First published:

Tags: Netflix