ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

குறைந்த விலையில் நெட்பிளிக்ஸின் புதிய “Basic with ads” பிளான்! இந்தியாவிற்கு எப்போது கிடைக்கும்?

குறைந்த விலையில் நெட்பிளிக்ஸின் புதிய “Basic with ads” பிளான்! இந்தியாவிற்கு எப்போது கிடைக்கும்?

நெட்ஃபிளிக்ஸ்

நெட்ஃபிளிக்ஸ்

தற்போதைய நிலவரத்தின்படி மொத்தமாக 12 நாடுகளுக்கு இந்த பிளானை அறிமுகப்படுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு பேசிக் வித் ஆட்ஸ்(Basic with ads) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ப்ளிக்ஸின் திட்டங்களிலேயே மிகவும் குறைந்த விலையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  பிரபல ஒடிடி நிறுவனமான  நெட்பிளிக்ஸ் தனது புதிய பேசிக் வித் ஆட்ஸ் சென்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்ப்ளிக்ஸ்-ன் சந்தாவிலேயே மிக குறைந்த அளவு கட்டணத்தை உடைய சேவை இதுவே ஆகும். இந்தத் திட்டத்தின் படி மொபைல் யூஸர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும் அதில் 15ல் இருந்து 30 நொடிகள் வரையிலான விளம்பரங்கள் இடையிடையே திரையில் தோன்றக்கூடும். தற்போதைய நிலவரத்தின்படி அந்நிறுவனம் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

  இதற்கு மக்கள் எவ்வாறு ஆதரவளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இதனை விரிவுபடுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் நெட்பிளிக்ஸ்-ன் மிக குறைந்தபட்ச கட்டணமாக 10 டாலர்கள் வரை மாத சந்தாவாக இருந்தது. நெட்பிளிக்ஸ்-இன் பேசிக் வித் ஆட்ஸ் (basic with ads) என்ற திட்டத்திற்கு இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

  Read More : எல்லாமே அடடே ரகம்தான்! வாட்ஸ்அப்பில் வரப்போகும் 5 அசத்தல் அப்டேட்டுகள்.!

  தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேசிக் வித் ஆட்ஸ் என்ற திட்டத்தின்படி ஏழு டாலர் வரை மாத சந்தாவாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் இந்த பேசிக் வித் ஆட்ஸ் பிளானிங் பயன்படுத்துபவர்கள் 720p தரத்திலான வீடியோக்களை மட்டுமே பார்க்க முடியும் என்று வரைமுறைகளை வகுத்துள்ளது நெட்பிளிக்ஸ். மற்ற பிரீமியம் வகை யூசர்களால் இதைவிட அதிக தரத்திலான வீடியோக்களை பார்க்க முடியும். அதே சமயத்தில் அதற்கான சந்தாவும் அதிகம்.மேலும் இந்த பேசிக் வித் ஆட்ஸ் என்ற பிளானை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது குறிப்பிட்ட அளவிலான நிகழ்ச்சிகளை மட்டுமே பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  ஏனெனில் உரிமங்கள் தொடர்பான சில கட்டுப்பாடுகள் இருப்பதினால் அனைத்து நிகழ்ச்சிகளையும் இவர்களால் பார்க்க முடியாது. இதுவும் சில காலங்களில் சரி செய்ய படலாம் என தெரிகிறது. இந்த பிளானை சப்ஸ்கிரைப் செய்த வாடிக்கையாளருக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை வீடியோக்களை பார்த்தால் அதில் மொத்தமாக நான்கிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலான விளம்பரங்கள் திரையில் காண்பிக்கப்படும். மேலும் உங்களால் டைட்டில்களை டவுன்லோட் செய்ய முடியாது என்ற கட்டுப்பாட்டையும் நெட்பிளிக்ஸ் விதித்துள்ளது.

  எந்தெந்த நாடுகளில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

  தற்போதைய நிலவரத்தின்படி மொத்தமாக 12 நாடுகளுக்கு இந்த பிளானை அறிமுகப்படுத்தப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ஸ்பெயின், யுகே மற்றும் யூஎஸ் ஆகிய நாடுகளில் வரும் நவம்பர் மாதம் இந்த பிளான் வழக்கத்திற்கு வரும் என தெரிவித்துள்ளது.

  இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

  மற்ற நாடுகளை விட இந்தியாவில் நெட்பிளிக்ஸ்-ன் சந்தாவானது மிக குறைவாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவிற்காக புதிய கட்டணங்களை நிர்ணயிக்க முடிவு செய்துள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாதத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு டாலர் வரை மட்டுமே சந்தா செலுத்தும் வகையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இத்திட்டத்தில் மொபைல் போனில் மட்டுமே நீங்கள் வீடியோக்களை பார்க்க முடியும்.

  இந்திய மதிப்பில் மாதத்திற்கு 150 ரூபாய் வரை மாத சந்தாவாக செலுத்த வேண்டி இருக்கும். இதில் 48௦p தரத்தில் வீடியோவை பார்க்கலாம். ஒரு மொபைல் ஒரு டேப்லெட் என இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து ரூபாய் 199 ரூபாய் 499 ரூபாய் 649 என்ற மதிப்பிலான பிளான்களும் உள்ளன. விலைக்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் வசதிகளில் வித்தியாசம் இருக்கும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Netflix, Technology