199 ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ்... இந்திய ரசிகர்களைக் கவர சிறப்பு ஆஃபர்..!

இன்று முதலே வாடிக்கையாளர்கள் இத்திட்டத்துக்கு சந்தா செலுத்தத் தொடங்கலாம்.

199 ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ்... இந்திய ரசிகர்களைக் கவர சிறப்பு ஆஃபர்..!
நெட்ஃப்ளிக்ஸ்
  • News18
  • Last Updated: July 24, 2019, 4:15 PM IST
  • Share this:
நெட்ஃப்ளிக்ஸ் இந்திய ரசிகர்களைக் கவர மாதம் 199 ரூபாய் சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபைல் பயன்பாட்டுக்கு மட்டுமான இந்த சந்தா மூலம் ஒரேயொரு பயனாளர் ஒரே மொபைல் ஐடி மூலம் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். எஸ்டி ரெசொலியூஷன் (480p) வீடியோக்களை வெறும் 199 ரூபாய்க்கு வாடிக்கையாளர்களால் காண முடியும்.

இந்தியாவில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைக் கண்டு போட்டியில் முன் நிக்க இந்த அதிரடி ஆஃபரை நெட்ஃப்ளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மொபைல் பயன்பாடு சர்வதேச அளவில் இந்தியாவில் அதிகம் இருப்பதும் இந்த ஆஃபருக்கு ஒரு காரணம் என்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.


ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய தளங்கள் இந்தியாவில் பல சலுகைகள் அளிக்கும் முன்னணி தளங்களாக உள்ளன. இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ்-க்கு 2019-ன் முதல் காலாண்டில் 2 மில்லியன் புதிய பயனாளர்களும் இரண்டாம் காலாண்டில் 5 மில்லியன் புதிய பயனாளர்களும் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.

இதே 199 ரூபாய் நெட்ஃப்ளிக்ஸ் சந்தா திட்டம் தற்போதைக்கு இந்தியாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதலே வாடிக்கையாளர்கள் இத்திட்டத்துக்கு சந்தா செலுத்தத் தொடங்கலாம். இதர நாடுகளுக்கும் இத்திட்டம் அறிமுகம் ஆகுமா என விளக்கப்படவில்லை.

மேலும் பார்க்க: சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அமேசானில் சிறப்புத் தள்ளுபடிகள்..!
First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்