முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / பூமியை நோக்கி அதிவேகத்தில் வரும் வால் நட்சத்திரம் - நாளை முதல் காணலாம்

பூமியை நோக்கி அதிவேகத்தில் வரும் வால் நட்சத்திரம் - நாளை முதல் காணலாம்

படம்: First Post

படம்: First Post

பூமியை நெருங்கி வரும் அரிய வகை வால் நட்சத்திரத்தை நாளை முதல் இந்தியாவில் காண முடியும் என வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

  • Last Updated :

நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட ’NEOWISE’ என்ற வால் நட்சத்திரம் அதிவேகமாக பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. தற்சமயம் புவியில் இருந்து 200 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இது ஜூலை 22-23 தேதிகளில் 64 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வந்துவிடும்.

இதனை நாளை முதல் 20 நாட்களுக்கு வடமேற்கு திசையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் இந்தியாவில் காண முடியும்.

Also see:

top videos

    மற்ற வால்நட்சத்திரங்கள் போல் இல்லாமல் வெறும் கண்களாலேயே இதனை பார்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். ஆகஸ்ட் மாதம் புவியில் இருந்து இது விலகிச் செல்லும் போது தொலைநோக்கி மூலம் பார்க்கலாம் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: NASA, Space