Home /News /technology /

Necrobotics: ரோபோவாக மாறும் சிலந்தி பற்றி தெரியுமா உங்களுக்கு?

Necrobotics: ரோபோவாக மாறும் சிலந்தி பற்றி தெரியுமா உங்களுக்கு?

Necrobots

Necrobots

Necrobotics: மெக்கானிக்கல் இன்ஜினியர் டேனியல் ப்ரெஸ்டனுடன் இணைந்து, யாப் மற்றும் அவரது சகாக்கள் இறந்த ஓநாய் சிலந்தியின் கால்களை விரித்து பொருட்களைப் பிடிக்கும் க்ரிப்பராக மாற்றும் வழியைக் கண்டுபிடித்தனர். இந்த புதிய வகை ரோபோட்டிக்ஸை 'நெக்ரோபாட்டிக்ஸ்' என்று அழைகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
பிளாஸ்டிக், எஃகு, ஏன் தங்கம், பிளாட்டினத்தில் கூட ரோபோ செய்து பார்த்திருப்பீர்கள். இறந்த ஒரு பூச்சி ரோபோவாக மாறியதை பார்த்துள்ளீர்களா?

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் யாப் தான் இப்படி ஒரு ரோபோவை செய்துள்ளார். இறந்த சிலந்திகளை மெக்கானிக்கல் கிரிப்பர்களாக மாற்றுவது ஒரு கனவுக் காட்சியாக இருக்கலாம். ஆனால் சிலந்தி கால்கள் பெரிய, மென்மையான மற்றும் ஒழுங்கற்ற வடிவிலான பொருட்களை உடைக்காமல் உறுதியாகவும் மென்மையாகவும் பிடிக்கும் தன்மை கொண்டது.

எனவே, மெக்கானிக்கல் இன்ஜினியர் டேனியல் ப்ரெஸ்டனுடன் இணைந்து, யாப் மற்றும் அவரது சகாக்கள் இறந்த ஓநாய் சிலந்தியின் கால்களை விரித்து பொருட்களைப் பிடிக்கும் க்ரிப்பராக மாற்றும் வழியைக் கண்டுபிடித்தனர்.
இந்த புதிய வகை ரோபோட்டிக்ஸை 'நெக்ரோபாட்டிக்ஸ்' என்று அழைகின்றனர்.

ஒளிரும் பவளப்பாறை நிறமிகளால் வாழும் ஆழ்கடல் பாசிகள்

மனிதனின் கால்களை போல் எலும்போ மூட்டுகளோ சிலந்திகளுக்கு இல்லை. சிலந்தி கால்களுக்கு நீட்டிக்க தசைகள் இல்லை, மாறாக ஹைட்ராலிக் அழுத்தம் மூலம் கால்களை நகர்த்துகின்றன - அவை ப்ரோசோமா சேம்பர் அல்லது செபலோதோராக்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. உள் உடல் திரவத்தை அவற்றின் கால்களுக்குள் அனுப்பி , அவற்றை நீட்டுகிறது.

எனவே,இந்த மாணவர் குழு சிலந்தியின் புரோசோமா சேம்பருக்குள் ஒரு ஊசியைச் செருகி ஊசியின் நுனியைச் சுற்றி சூப்பர் க்ளூவுடன் ஒட்டி விட்டது. சிலந்தியின் கால்களைச் செயல்படுத்த, சிரிஞ்ச் வழியாக ஒரு சிறிய காற்றை அழுத்தினால் போதும்."ஊசியை எங்கு வைக்க வேண்டும் என்று எங்களிடம் ஒரு மதிப்பீடு இருந்தது. நாங்கள் அதைச் செய்தபோது, ​​அது முதல் முறையிலேயே சரியாக வேலை செய்தது. அந்த தருணத்தை எப்படி விவரிப்பது என்று கூட எனக்குத் தெரியவில்லை." என்றார் யாப்.

இந்த நெக்ரோபோடிக் கிரிப்பர் ஒரு மின்சார ப்ரெட்போர்டில் இணைக்கப்பட்ட ஜம்பர் வயர், பாலியூரிதீன் நுரையின் ஒரு தொகுதியை நகர்த்துவது உட்பட, மென்மையான பொருள்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்களை தூக்கி சோதனை செய்யப்பட்டது. அதே அளவுள்ள மற்றொரு சிலந்தியின் எடையை அந்த சிலந்தி தாங்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும்பாலான ரோபாட்டிக்ஸ் கூறுகள் தயாரிப்பதற்கு மிகவும் சிக்கலானவை என்றாலும்,  நெக்ரோபாட்டிக்ஸ் இயற்கையால் உருவாக்கப்பட்ட தனித்துவமான வடிவமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது, அவை சிக்கலானதாகவோ அல்லது செயற்கையாகப் பிரதிபலிக்க முடியாததாகவோ இருக்கலாம் ஆனால் சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டால் பெரிய மாயங்கள் செய்யலாம் என்கின்றனர்.

சிலந்திகளும் மக்கும் தன்மை கொண்டவை, எனவே அவற்றை ரோபோ பாகங்களாகப் பயன்படுத்துவது ரோபோட்டிக்ஸில் கழிவுகளின் அளவைக் குறைக்கும். இறந்த ஸ்பைடர் கிரிப்பரின் ஒரு குறைபாடு என்னவென்றால், அது இரண்டு நாட்களுக்குப் பிறகு அல்லது 1,000 திறந்த மற்றும் மூடும் சுழற்சிகளுக்குப் பிறகு சில தேய்மானங்களை அனுபவிக்கத் தொடங்குகிறது.

சர்வதேச புலிகள் தினம் 2022: புலி இந்தியாவின் தேசிய விலங்கான கதை

"மூட்டுகளின் நீர்ப்போக்கு தொடர்பான பிரச்சனைகளுடன் தொடர்புடையது என்று நினைக்கிறோம். பாலிமெரிக் பூச்சுகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதைச் சமாளிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று பிரஸ்டன் விளக்குகிறார்.

ஆராய்ச்சியாளர்கள் ஓநாய் சிலந்திகளை தேன் மெழுகில் பூசி  பரிசோதித்தனர்.spider மேலும் அதன் நிறை குறைவு 10 நாட்களில் பூசப்படாத சிலந்தியை விட 17 மடங்கு குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர், இதன் காரணத்தால் சிலந்தியின் ஹைட்ராலிக் அமைப்பு நீண்ட நேரம் செயல்படக்கூடும் என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இனி இருந்த பூச்சிகளை சேமித்து நீங்களும் ரோபோ ஆக்கமுடியுமா என்று சோதித்து பாருங்கள்….
Published by:Ilakkiya GP
First published:

Tags: Research, Robo, Technology

அடுத்த செய்தி