முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / WhatsApp-ல் நவராத்திரி ஸ்டிக்கர்களை டவுன்லோட் & ஷேர் செய்வது எப்படி!

WhatsApp-ல் நவராத்திரி ஸ்டிக்கர்களை டவுன்லோட் & ஷேர் செய்வது எப்படி!

நவராத்திரி

நவராத்திரி

வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களுக்கான ஆப்ஸ்களின் பரிந்துரை பட்டியலை பெற Navratri 2021 WhatsApp stickers என்று டைப் செய்து தேடவும்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

நம் நாட்டில் செப்டம்பர் துவங்கி டிசம்பர் வரையிலும் ஏராளமான பண்டிகைகள் வரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி முதல் கிறிஸ்துமஸ் வரை எண்ணற்ற பண்டிகைகள் இந்த காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை நவராத்திரி. நடப்பாண்டு நவராத்திரி விழாவானது கடந்த அக்டோபர் 7-ம் தேதி துவங்கி வரும் 15-ஆம் தேதி வரை 9 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மலர்கள், பழங்கள், சுண்டல் வகைகள் என இந்த 9 நாளும் ஒன்பது வகைகளில் இறைவனுக்கு வைத்து படைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். கிரிப்பாக நவராத்திரியில் ஸ்பெஷலான ஒன்று கொலு வைப்பது.

அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரயும் வீட்டு கொலுவிற்கு வர வைத்து அவர்களுக்கு பரிசுகளுடன் சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்களை கொடுத்து அனுப்புவது வழக்கம். ஆனால் தொற்று அபாயம் காரணமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த பெரும் விழாவை நேரில் வந்து பார்த்து வாழ்த்து சொல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

ஆனால் நம்மிடம் எந்நேரமும் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மூலம் ஒருவருக்கொருவர் நவராத்திரி வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள ஏதுவாக வாட்ஸ்அப் உள்ளிட்ட மெசேஜிங் சர்வீஸில் நவராத்திரி 2021-ன் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி கொள்ளலாம். வாட்ஸ்அப்பில் சில ஸ்டிக்கர்கள் கொடுக்கப்படிருந்தாலும் கூட, பிற ஆப்ஸ்களில் இருந்து புதிய ஸ்டிக்கர்களை பெற்று நமது அன்புக்குரியவர்களுக்கு அனுப்புவதற்கான ஆப்ஷன்களும் இருக்கிறது. வாட்ஸ்அப்பில் அனுப்புவதற்கான சிறந்த நவராத்திரி 2021 ஸ்டிக்கர்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.

* ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்துபவராக இருந்தால் கூகுள் ப்ளே ஸ்டோருக்கும், ஐபோன் யூஸராக இருந்தால் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கும் செல்லவும்.

* வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களுக்கான ஆப்ஸ்களின் பரிந்துரை பட்டியலை பெற Navratri 2021 WhatsApp stickers என்று டைப் செய்து தேடவும்.

* பின்னர் பட்டியலில் தோன்றும் ImageTag நிறுவனத்தின் 'Happy Navratri Stickers WASticker Apps 2021" ஆப்ஸிற்கோ அல்லது நல்ல ஸ்டார் ரேட்டிங் வாங்கி இருக்கும் வேறு ஏதாவது உங்களுக்கு விருப்பமான ஆப்ஸிற்கோ செல்லுங்கள்.

* பின்னர் உங்கள் போனில் குறிப்பிட்ட அந்த App-ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து அந்த App-ஐ ஓபன் செய்து அதில் காணப்படும் Open Stickers packs என்ற ஆப்ஷனை டேப் செய்து கொள்ளுங்கள். ஒரு சில ஆப்களில் ADD TO WHATAPP என்ற ஆப்ஷன் காணப்படும்.

* இங்கே பல நவராத்திரி ஸ்டிக்கர் பேக்ஸ்களை பார்க்கலாம்.

* பேக்கின் வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் 'பிளஸ்' ஐகானை டேப் செய்வதன் மூலம் நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு பேக்கை கலெக்ஷனில் சேர்த்து கொள்ளலாம். முன்பு கூறியது போல ADD TO WHATAPP ஆப்ஷன் காணப்பட்டால் அதை நேரடியாக வாட்ஸ்அப்பில் சேர்க்க அதை க்ளிக் செய்து கொள்ளவும்.

Also read... கூலிங்க் வசதியுடன் வரும் ‘ஒன்பிளஸ் 9 ஆர்டி’ ஸ்மார்போன் - அதிகாரப்பூர்வ வெளியீடு தேதி அறிவிப்பு!

* கலெக்ஷனில் சேர்த்து கொண்ட ஸ்டிக்கர் பேக்கை எந்தெந்த மெஸேஜிங் சர்வீஸ்களில் பயன்படுத்த முடியும் என்பதை குறிப்பிட்ட App காட்டும். அப்போது நீங்கள் வாட்ஸ்அப் என்பதை செலக்ட் செய்து Add என்ற ஆப்ஷன் மூலம் ஸ்டிக்கர் கலெக்ஷன்களை வாட்ஸ்அப்பில் சேர்த்து கொள்ளலாம்.

* பின்னர் வாட்ஸ்அப்பில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுக்கான Chat box-ஐ திறந்து ஸ்டிக்கர் ஆப்ஷனுக்கு சென்றால் அங்கெ நீங்கள் புதிதாக சேர்த்த நவராத்திரி ஸ்டிக்கர் கலெக்ஷன்கள் இருக்கும். அதனை நவராத்திரி வாழ்த்து தெரிவிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

First published:

Tags: Navarathri, Navaratri, WhatsApp