National Technology Day 2021 : இன்று தேசிய தொழில்நுட்ப தினம் - இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன?

30வது தேசிய தொழில்நுட்ப தினம்

மற்ற நாடுகளிடம் இருந்து கேட்டு பெறுவதற்கும், நட்பு நாடுகளுக்கு உதவுவதற்கும் தொழில்நுட்ப கட்டமைப்பு அத்தியாவசியமாகிறது

  • Share this:
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகள், அடுத்த தலைமுறை வளர்ந்த நாடுகளாக இருக்க முடியும் என கூறப்படுவதால், உலக நாடுகள் அனைத்தும் தங்களின் தொழில்நுட்ப சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றன.

உலக நாடுகளை தங்களின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டு வரவும், தேவையானதை மற்ற நாடுகளிடம் இருந்து கேட்டு பெறுவதற்கும், நட்பு நாடுகளுக்கு உதவுவதற்கும் தொழில்நுட்ப கட்டமைப்பு அத்தியாவசியமாகிறது. அந்தவகையில் இந்தியாவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அறிவியல் துறையில் சிறந்து விளங்குவோரை கவுரவிக்கவும் தேசிய தொழில்நுட்ப தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ :  கொரோனவை கணித்த நெட்டிசனிடம் கல்யாணத்தை கணிக்கச் சொல்லும் 90s கிட்ஸ்!

ஆண்டுதோறும் மே 11ம் தேதி கொண்டாடப்படும் தேசிய தொழில்நுட்ப தின விழாவில், நாட்டில் சிறந்து விளங்கிய விஞ்ஞானிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் கொடுத்து கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்திய தேசிய அறிவியல் தொழில்நுட்ப நாள் என்பது 1999ம் ஆண்டு மே 11ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. 1998ம் ஆண்டு மே 11ம் தேதி பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை வெற்றிப்பெற்றது. இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியையும், இந்திய அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் பறைசாற்றும் விதமாக 1998, மே 11ம் தேதியை தேசிய தொழில்நுட்ப நாளாக மத்திய அரசு அறிவித்தது.

வரலாறு

1998 ஆம் ஆண்டு, மே 11ம் தேதி இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மற்றும் அவரது குழுவின் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றியை கொடுத்தது. மே 13ம் தேதியும் இரு அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.

ALSO READ :  மணமகள் கையால் தாலி கட்டிக் கொண்ட மணமகன் - கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!

அந்த சோதனைகளும் வெற்றிபெற்றன. இதனையடுத்து, உலக அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா 6வது நாடாக இணைந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு காரணமான விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி மற்றும் விஞ்ஞானம் குறிப்பிடத்தகுந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், அந்த நாளை தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாளாக அறிவித்தார். ஆண்டுதோறும் மே 11ம் தேதி இந்திய அறிவியல் துறைக்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைக் கொடுத்த விஞ்ஞானிகள் மற்றும் அறிவியலாளர்களுக்கு இந்த நாளில் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாள் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதிப்பு காரணமாக விருது வழங்கும் விழா நடைபெறவில்லை.

ALSO READ : புளோரிடாவில் வரலாற்று சிறப்புமிக்க கொலம்பியா மாமத்தின் எலும்புக்கூடு, சுறாக்களின் புதைப்படிவங்கள் கண்டுபிடிப்பு

மையக்கருத்து

தேசிய அறிவியல் தொழில்நுட்ப நாள் ஒவ்வொன்றும் மையக்கருத்து அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் அறிவியலைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்ற அடிப்படையில் Rebooting the Economy through Science என்ற மையக்கருத்து இடம்பெற்றிருந்தது. சுருக்கமாக RESTART'. என அழைத்தனர். இந்த ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீடித்த வளர்ச்சியை உருவாக்குவோம் (Science and Technology for a Sustainable Future) என்ற மையக்கருத்து எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

 
Published by:Sankaravadivoo G
First published: