முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Perseverance Rover | பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களைத் தேடி செவ்வாய் கிரகத்தில் களமிறங்கிய ‘பெர்சிவரன்ஸ்’!

Perseverance Rover | பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களைத் தேடி செவ்வாய் கிரகத்தில் களமிறங்கிய ‘பெர்சிவரன்ஸ்’!

செவ்வாய் கிரகத்தில் பண்டைய வாழ்வின் சாத்தியமான ஆதாரங்களுக்கான மாதிரிகளை ரோவர் சேகரிக்கும்.

செவ்வாய் கிரகத்தில் பண்டைய வாழ்வின் சாத்தியமான ஆதாரங்களுக்கான மாதிரிகளை ரோவர் சேகரிக்கும்.

செவ்வாய் கிரகத்தில் பண்டைய வாழ்வின் சாத்தியமான ஆதாரங்களுக்கான மாதிரிகளை ரோவர் சேகரிக்கும்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் களமிறக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ரோபோட், அந்த கிரகத்தில் இருக்கும் ஒரு மிக பெரிய பிரமாண்டமான பள்ளத்தை ஆய்வு செய்யும் தனது பயணத்தைத் துவங்க உள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும் சாத்தியக் கூறுகளை ஆராயும் பணிக்காக இந்த சிவப்பு கிரகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர். செவ்வாய் கிரகத்தில் தற்போது ரோவர் ஆராயப் போகும் பள்ளமானது பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் மிக பெரிய ஒரு ஏரியாக இருந்தது.

தற்போது நீரின்றி காணப்படும் இந்த சிவப்பு கிரகம் ஒரு காலத்தில் ஈரமாக நீரோட்டத்துடன் இருந்துள்ளது. இந்த ஆராய்ச்சி பயணத்தின் போது பெர்சிவரன்ஸ் ரோவர் ஆட்டோ நேவிகேஷனைப் பயன்படுத்தி தனக்கான கட்டளையை எடுத்து கொள்ளும். இதற்கான அர்த்தம் ரோவர் ரோபோட் வாகனமானது பயணத்தின் போது கூடுதல் டேரக்ஷன்களை பெற முடியாது. ஆட்டோ நேவிகேஷன் என்பது ஒரு அறிவார்ந்த வழிமுறையாகும். இது 3D- மேப்பிங் சூழலில் ரோவர் இருக்க உதவுகிறது மற்றும் அதன் இயக்கத்தின் போது சிறந்த நேவிகேஷன் வழியை கண்டறிய உதவுகிறது.

இது தொடர்பான நாசாவின் அறிக்கையில் ரோவரின் திட்டமிடல் குழுவின் மூத்த பொறியாளரான வெர்மா குறிப்பிடுகையில், ‘டிரைவிங்கின் போது சிந்திப்பது' என்ற திறன் நம்மிடம் உள்ளது. அதே போல ரோவர் அதன் சக்கரங்கள் இயங்கும் போது ஆட்டோமேட்டிக் டிரைவ் பற்றி தொடர்ந்து “சிந்திக்கிறது”. இந்த பணிக்காக ரோவர் அதன் கம்ப்யூட்டர்களில் ஒன்றை அர்ப்பணிக்கிறது. ஆட்டோநேவ் என்று அழைக்கப்படும் இந்த மேம்பட்ட அமைப்பு, நிலப்பரப்பின் 3D வரைபடங்களை முன்னோக்கி உருவாக்குகிறது, ஆபத்துக்களை அடையாளம் காட்டுகிறது.

மேலும், பூமியில் இருந்து வரும் கூடுதல் கட்டளை இல்லாமல் எந்த தடைகளையும் சுற்றி ஒரு பாதையைத் திட்டமிடுகிறது. இருப்பினும், பெர்சிவரன்ஸ் ரோவர் பயணத்திற்கு ஆட்டோ நேவிகேஷன் மட்டும் போதாது. எனவே, ரோவரை இயக்கும் நாசா குழுவானது நேவிகேஷன் ரூட்ஸை திட்டமிடுவதன் மூலம் ரோவர் பின்பற்றுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முக்கியமான கடின வேலையை செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையிலான ரேடியோ சிக்னல் தாமதம் காரணமாக விஞ்ஞானிகள் ஜாய் ஸ்டிக் மூலம் ரோவரை கட்டுப்படுத்த முடியாது என்பதால் ஆட்டோ நேவிகேஷன் பயன்படுத்தப்படுகிறது.

பெர்சிவரன்ஸ் ரோவரால் மணிக்கு 120 மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இது, இதன் முன்னோடியான கியூரியாசிட்டி ரோவரை விட அதிக வேகமானது. கியூரியாசிட்டியால் மணிக்கு 20 மீட்டர் வேகத்தை மட்டுமே எட்ட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கியூரியாசிட்டியிலும் ஆட்டோ நேவிகேஷன் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் கியூரியாசிட்டியை விட பெர்சிவரன்ஸ் ரோவரின் ஆட்டோ நேவிகேஷன் மிகவும் மேம்பட்டது. வேகத்தில் மட்டுமல்ல, கடுமையான நிலப்பரப்பில் பயணம் செய்வதிலும் கூட.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெர்சிவரன்ஸ் ரோவர் கூர்மையான பொருட்கள் அல்லது பாறைகளில் மோதி சேதமடைவதை தவிர்க்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சில பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏரியாக இருந்ததாக விஞ்ஞானிகள் கருதும் குறிப்பிட்ட மிகப்பெரிய பள்ளம் வழியே பயணிக்க உள்ள ரோவர், செவ்வாய் கிரகத்தில் பண்டைய வாழ்வின் சாத்தியமான ஆதாரங்களுக்கான மாதிரிகளை சேகரிக்கும். ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் ஏரி இருந்திருந்தால், அதன் மூலம் அந்த கிரகத்தில் வாழ்ந்த உயிரினங்கள், பண்டைய வாழ்க்கையின் அறிகுறிகளைக் கண்டறிய முடியும் என்று ஆரய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

First published:

Tags: MARS, NASA, Science