Home /News /technology /

செவ்வாய் கிரகத்தில் பள்ளம்.. ஆய்வு செய்த பெர்செவரென்ஸ் கண்டறிந்தது என்ன?

செவ்வாய் கிரகத்தில் பள்ளம்.. ஆய்வு செய்த பெர்செவரென்ஸ் கண்டறிந்தது என்ன?

பெர்செவரன்ஸ்

பெர்செவரன்ஸ்

ரோவரில் 12 பாறை மாதிரிகள் உள்ளன. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் 2030 இறுதியில் பூமிக்கு கொண்டுவரப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசாவின் பெர்செவரென்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் முயற்சியில் பழைய நதி டெல்டாவின் பகுதிகளை ஆராய்ந்த போது மிக முக்கியமான சில மாதிரிகளைச் சேகரித்துள்ளது.

நாசாவின் செவ்வாய் கிரகத்துக்கான இரண்டாவது ரோவர், பெர்செவரன்ஸ், ஜூலை 2020 இல் புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்டது. பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. ரோவர் 18 மாதங்களாக செவ்வாய் கிரகத்தில் இயங்கி வருகிறது. அதன் பணியின் ஒரு பகுதி கடந்த கால உயிரியல் ஆதாரங்களைத் தேடுவதாகும்.

CNN இன் அறிக்கையின்படி, செவ்வாயில் உள்ள ஜெஸெரோ க்ரேட்டர், எனும் ஏரி மற்றும் அதில் வடிந்த டெல்டா பகுதிகளின் சில சமீபத்திய மாதிரிகளில் கரிமப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழக்கூடிய சூழல் இருந்திருக்க கூடும் என்பதை இது காட்டுகிறது.

பசடேனாவில் உள்ள கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பெர்செவரன்ஸ் திட்ட விஞ்ஞானி கென் ஃபார்லி, "டெல்டாவில் நாங்கள் ஆய்வு செய்து வரும் பாறைகளில் கரிமப் பொருட்களின் செறிவு அதிகமாக உள்ளது.செவ்வாய் கிரகத்தில் இதுவரை செய்த ஆய்வில் இந்த மாதிரியான கரிம பொருட்கள் கிடைத்ததில்லை" என்றார்.

பீரங்கி குண்டு அளவிலான டைனோசர் முட்டைகள்..! - சீனாவில் கண்டுபிடிப்பு

சிஎன்என் கருத்துப்படி , தனித்தன்மை வாய்ந்த உயிர்-ஆதாரங்களை பராமரிக்கும் பாறை மாதிரிகள் பெர்செவரன்சால் சேகரிக்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி, ரோவரில் 12 பாறை மாதிரிகள் உள்ளன. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் 2030 இறுதியில் பூமிக்கு கொண்டுவரப்படும்.

ஃபார்லியின் கூற்றுப்படி, பெர்செவரன்ஸ் 550 சோல்ஸ் அல்லது செவ்வாய் கிரக நாட்களை செலவழித்துள்ளது. முதலில் நினைத்ததை விட பள்ளத்தின் கடந்த காலம் மிகவும் சிக்கலானது என்பதைக் கண்டறிந்தது.

செவ்வாய் கிரகத்தில் பெர்செவரன்ஸ் ஆய்வு செய்யும் பள்ளம் ஒரு ஏரியாக இருந்திருக்கலாம். அல்லது அதற்கு முன்னர் ஒரு எரிமலையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். எரிமலை செயல்பாடுகளின் தடயங்களும் தெரிந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: MARS, NASA

அடுத்த செய்தி