ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நிலவின் அழகே தனி... 6வது நாளில் சந்திரனுக்கு மிக அருகில் பறந்த நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1​​

நிலவின் அழகே தனி... 6வது நாளில் சந்திரனுக்கு மிக அருகில் பறந்த நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1​​

ஓரியன் விண்கலம் - நிலவு

ஓரியன் விண்கலம் - நிலவு

நாசா பெரிய ஆர்பிட்டல் மேனுவரிங் சிஸ்டம் எஞ்சின், சிறிய ரியாக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் த்ரஸ்டர்கள், நடுத்தர அளவிலான துணை இயந்திரங்களைக் கொண்டு ஓரியன் விண்கலத்தை வடிவமைத்து முதற்கட்ட சோதனையை செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

மனிதன் நிலவில் காலடிவைத்து 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏவப்பட்ட நாசாவின் ஓரியன் விண்கலம் திங்களன்று நிலவின் வெற்றிகரமான பயணத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் தரையிறங்கிய இடத்திற்கு மேல் பறந்து நிலவின் ஒளிரும் மேற்பரப்பின் படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.

ஆர்ட்டெமிஸ் I விண்கலத்தின் ஆறாவது நாளான நேற்று ஓரியன் விண்கலம் தனது நான்காவது சுற்றுப்பாதையில் செல்லும்போது சந்திரனுக்கு மிக அருகில் பறந்து சென்றதாக நாசா தனது பக்கத்தில் பதிவிட்டது. மேலும் ஆர்ட்டெமிஸ் I விண்கலம் அப்பல்லோ 14 தளத்தின் மீது சுமார் 9656 கிலோமீட்டர் உயரத்திலும் , பின்னர் அப்பல்லோ 12 தளத்தின் மீது சுமார் 12,391 கிலோமீட்டர் உயரத்திலும் பறந்துள்ளது.

நாசாவின் ஆய்வு அமைப்புகள் மேம்பாட்டுக்கான அசோசியேட் அட்மினிஸ்ட்ரேட்டர், ஜேம்ஸ் ஃப்ரீ ஒரு ட்வீட்டில், விண்கலம் சந்திர மேற்பரப்பில் இருந்து 81 மைல் உயரத்தில் இருந்தது. இது மணிக்கு 5,102 மைல் வேகத்தில் பயணித்து தனது நிலவு பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது” என்று பதிவிட்டார்.

அதோடு நிலவிற்கு அருகில் செல்லும்போது அதன் ஒளிரும் மேற்பரப்பின் படங்களையும் வீடியோக்களையும் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அதை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.

அதேபோல நிலவின் அருகில் இருந்து பூமி எப்படி தெரியும் என்றும் படம் பிடித்து காட்டியுள்ளது. நிலவின் மேற்பரப்பு பெரிதாகவும் , தூரத்தில் சிறிய பந்து போல பூமி தெரியும் படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது. நிலவு அருகில் செல்லும் விண்கலத்தின் முழு வீடியோவும் வெளியாகியுள்ளது.

ஓரியன் விண்கலம்

மீண்டும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்கா அதை சோதிக்க நாசா பெரிய ஆர்பிட்டல் மேனுவரிங் சிஸ்டம் எஞ்சின், சிறிய ரியாக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் த்ரஸ்டர்கள், நடுத்தர அளவிலான துணை இயந்திரங்களைக் கொண்டு ஓரியன் விண்கலத்தை வடிவமைத்து முதற்கட்ட சோதனையை செய்துள்ளது.

' isDesktop="true" id="842177" youtubeid="BvWtNx3VOUA" category="technology">

சோதனைக்காக மனிதர்களுக்குப் பதிலாக டம்மிகளை ஏற்றிச் சென்ற விண்கலம் நிலவின் மேற்பரப்புக்கு மிக அருகில் தனது சுற்றுவட்ட பாதையில் சென்றுள்ளது. மேலும் ஓரியன் சந்திரன் பூமியைச் சுற்றி பயணிக்கும் திசைக்கு எதிர்மாறாக சந்திரனைச் சுற்றி பயணிக்கிறது

இந்த சுற்றுப்பாதையானது மிகவும் நிலையான சுற்றுப்பாதையை வழங்குகிறது. அங்கு பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள சூழலில் ஓரியன் அமைப்புகளை சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Moon, NASA