நிலவில் மனிதன் நீண்ட காலம் தங்குவதற்கு ஏற்ற சூழல் பற்றிய சாத்தியக்கூறு மற்றும் சோதனை செய்ய நாசா இன்று ஆர்டெமிஸ் 1 என்ற ஒரு ஏவுகணையை விண்ணில் ஏவ உள்ளது. ஏவும் மிகவு மற்றும் அதன் பின் உள்ள நிகழ்வுகளை நாசா 2 மணி நேர நேரலையாக ஒளிபரப்ப உள்ளது.
ஆர்டெமிஸ் 1 மிஷன்:
சந்திரனைப் பற்றிய மனிதகுலத்தின் புரிதலை விரிவுபடுத்துவதற்கான சிக்கலான பணிகளின் தொடரில் ஆர்ட்டெமிஸ் I முதன்மையாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் புதிய விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட், ஓரியன் விண்கலம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தரை அமைப்புகளுக்கான முதல் ஒருங்கிணைந்த சோதனை விமானம் இதுவாகும். ஆறு வார கால பயணத்தின் போது SLS ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலத்தின் திறன்கள் மற்றும் செயல்திறனை சோதிக்கும்.
நாசா இந்த விண்கலனை விண்ணில் பாய்ச்சும் காட்சியைக் காண விரும்பினால் இந்திய நேரப்படி இன்று மாலை 6:03 மணிக்கு நாசாவின் அதிகாரபூர்வ வலைத்தளம், நாசாவின் யூடியூப், சமூக வலைதள பக்கங்களிலும் காணலாம் . இல்லையேல் கீழுள்ள வீடியோ இணைப்பில் காணலாம்.
உள்ளே என்னென்ன இருக்கு?
ஓரியன் காப்ஸ்யூலில் உள்ள பேலோடில் மூன்று சோதனை டம்மிகள் இருக்கும். ஆரஞ்சு நிற விமான உடையில் ஒரு டம்மி, அதிர்வு மற்றும் முடுக்கம் உணரிகளுடன் கமாண்டர் இருக்கையில் இடம் பெற்றிருக்கும். மனித திசுக்களைப் பிரதிபலிக்கும் பொருட்களால் செய்யப்பட்ட மற்ற இரண்டு டம்மிகளும் இதோடு அனுப்பப்படும்.
இவை நிலவுக்கு செல்லும் மனித உடலில் உள்ள காசிம் கதிர்வீச்சை அளவிடும். இது விண்வெளிப் பயணங்களின் மிகப்பெரிய ஆபத்துக்கான சாத்தியக்கூறுகள் ஒன்றாகும். இவற்றில் ஒரு இஸ்ரேலின் பாதுகாப்பு உடையும் சோதித்து பார்க்க அனுப்படுகிறது.
மூன்று டம்மிகளைத் தவிர, ஓரியன் விண்கலம் சந்திரனுக்கு அருகில் வந்தவுடன் பத்து சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தும். இந்த செயற்கைக்கோள்கள் ஒரு வருடத்திற்கு முன்பு ராக்கெட்டில் நிறுவப்பட்டன.
நிலவில் செடிகளை பயிரிடும் திட்டம்: நாசாவுடன் கைகோர்க்கும் ரெட் வயர் நிறுவனம்
ஓரியன் விண்கலம் 1969 ஆம் ஆண்டில் அப்பல்லோ 11 இன் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோரால் சேகரிக்கப்பட்ட சந்திர பாறைகளின் சில வெள்ளி துகள்களையும், ஒரு தசாப்தத்திற்கு முன்பு கடலில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட்டில் இருந்து ஒரு போல்ட்டையும் கொண்டு செல்லும்.
அதோடு....
விதைகள், பூஞ்சைகள், ஈஸ்ட் மற்றும் பாசிகள் மீதான பரிசோதனைகள் அடங்கிய உயிரியல் பரிசோதனை-01 ஐயும் ஓரியன் எடுத்துச் செல்லும். அமேசான், சிஸ்கோ மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஆன்-போர்டு குரல் அங்கீகார அமைப்பும் இதில் உள்ளது.
இந்த விமானம் பூமியிலிருந்து மேலும் பல ஆயிரக்கணக்கான பிற பொருட்களையும் விண்வெளிக்கு கொண்டு செல்கிறது. இவற்றில் நிலவில் புதைக்கப்பட்ட இருக்கும் விதைகள் , டெட் சீ கடலில் இருந்து எடுக்கப்பட்ட கூழாங்கல், மிஷன் பேட்ச்கள், ஸ்டிக்கர்கள், USB டிரைவ்கள் மற்றும் தேசிய கொடிகள், சில லெகோக்கள் மற்றும் ஒரு ஸ்னூப்பி பொம்மைகளையும் கொண்டு செல்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Live telecast, Moon, NASA