53 வருடங்கள் கழித்து நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கான சோதனையில் நாசா இறங்கி செயல்பட்டு வந்தது. மனிதர்கள் நீண்டநாள் நிலவில் வாழும் சூழலை ஏற்படுத்தவும், சோதனைகளை செய்யவும் ஆர்டெமிஸ் 1 என்ற ஆளில்லா விண்கல சோதனையை கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று நாசா செய்ய திட்டமிட்டு இருந்தது.
முதல் முறை நிறுத்தம்:
ஆகஸ்ட் 29 அன்று இந்திய நேரப்படி மாலை 6.03 மணிக்கு புளோரிடா கென்னடி ஏவு தளத்தில் இருந்து ஆர்டெமிஸ் 1 விண்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏவுவதற்கு நான்கு மணி நேரம் முன்னர் அதன் நான்கு இன்ஜின்களில் ஒன்று செயல்படாததால் ஏவும் திட்டம் கைவிடப்பட்டது. பொறியியல் நிபுணர்கள் அதை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இரண்டாம் முயற்சி:
இன்ஜின் கோளாறுகள் சரி செய்யப்பட்டு நேற்று அதே ஏவுதளத்தில் இந்திய நேரப்படி இரவு 11.47 மணி அளவில் ஏவ இருப்பதாக நாசா தெரிவித்தது. ஆனால் ஏவுவதற்கு முன் அதில் ஹைட்ரஜன் நிரப்பும் பணி நடைபெற்றது.
உயிர்களை குடிக்கும் ஒளி விளக்குகள்..! - ஒளி மாசுபாடு குறித்த ஆய்வில் தகவல்
அப்போது பல்வேறு இடங்களில் கசிவுகளை கண்டறிந்தனர். சரி செய்ய எவ்வளவு முயன்றும் முழுமையாக சரி செய்ய முடியவில்லை. அதனால் இந்த இரண்டாவது முயற்சியும் கைவிடப்பட்டது.
அடுத்த முயற்சி:
செப்டம்பர் 5, 6 ஏவுவதற்கு காலநிலை சரியாக உள்ளது. ஆனால் அதற்குள் விண்கலத்தில் உள்ள கோளாறுகளை சரி செய்ய இயலாது என்று நாசா குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, அடுத்த ஏவுதல் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை அல்லது அக்டோபர் 17 முதல் 31 வரை உள்ள காலத்தில் நடைபெறலாம். ராக்கெட் இப்போது அதன் கட்டுமான தளத்திற்கு மீண்டும் எடுத்துச்செல்லப்படும். அங்கு இந்த விண்கலத்தின் சிக்கலைத் தீர்ப்பதற்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். எல்லாம் சரி என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் நிலவுக்கு ஏவப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Moon, NASA, Satellite launch