Home /News /technology /

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் நாசா திட்டம் இறுதி நேரத்தில் நிறுத்தம்.. காரணம் என்ன?

நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் நாசா திட்டம் இறுதி நேரத்தில் நிறுத்தம்.. காரணம் என்ன?

நாசா

நாசா

நாசாவின் புதிய விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட், ஓரியன் விண்கலம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தரை அமைப்புகளுக்கான முதல் ஒருங்கிணைந்த சோதனை விமானம் இதுவாகும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Inter, IndiaWashington Washington
1969 இல் முதன்முதலாக நிலவில் மனித இனம் கால் வைத்தது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் அப்பலோ 11 மூலம் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ரோங் பஸ் ஆல்ட்ரினுக்கு அடுத்து தற்போது தான் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

53 ஆண்டுகள் கழித்து நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. நிலவில் மனிதன் நீண்ட காலம் நிலவில் தங்கவும் ஆய்வு செய்யவும் ஏற்ற வகையில் ஒரு பயணத்திட்டத்தை உருவாக்க 'ஆர்டெமிஸ்' என்ற திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பவுள்ளது.

ஆர்டெமிஸ் 1
நிலவுக்கு மனிதனை அனுப்பும் முன்னர் அங்குள்ள சூழல்களை ஆராயவும், மனிதன் அங்கே சென்றால் என்னென்ன பிரச்சனைகள் வரும், எப்படி சமாளிப்பது என்பது குறித்த ஆய்வை செய்யவும், மனிதன் நீண்ட நாள் நிலவில் வாழ ஆயத்த பணிகளை செய்யவும் ஒரு சோதனை ஓட்டமாக ஆர்டெமிஸ் 1 விண்கலத்தை நிலவுக்கு நேற்று அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது.

நாசாவின் புதிய விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட், ஓரியன் விண்கலம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தரை அமைப்புகளுக்கான முதல் ஒருங்கிணைந்த சோதனை விமானம் இதுவாகும்.

நிலவில் செடிகளை பயிரிடும் திட்டம்: நாசாவுடன் கைகோர்க்கும் ரெட் வயர் நிறுவனம்

ஓரியன் காப்ஸ்யூலில் உள்ள பேலோடில் அதிர்வு மற்றும் முடுக்கம் உணரிகளுடன் ,  மனித திசுக்களைப் பிரதிபலிக்கும் பொருட்களால் செய்யப்பட்ட மூன்று சோதனை டம்மிகளை நிலவுக்கு அனுப்பி மனித உடல் விண்வெளி கதிர்வீச்சால் எவ்வாறு பாதிக்கப்படும் என்று  ஆராய இருந்தனர். நிலவில் விதைக்க விதைகளும் அனுப்பப்பட உள்ளது.

இந்திய நேரப்படி நேற்று மாலை 6.03 மணிக்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆர்டெமிஸ் 1 ஐ விண்ணில் ஏவ இருப்பதாக நாசா அறிவித்தது. அதற்கான நேரலை ஒளிபரப்புகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

கடைசியில் நிறுத்தப்பட்டது…
கவுண்ட் டவுன் முடிய நாலு மணிநேரம் இருக்கும் நிலையில் இந்த ஆர்டெமிஸ் 1 சோதனைத் திட்டம் கைவிடப்படுவதாக நாசா தெரிவித்தது. கோளாறு ஏற்பட்டு உடனே சரி செய்ய முடியாத நிலையில் விண்கலம் இருப்பதால், இந்த விண்கலத்தை இப்போது ஏவ முடியாது. தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்த பின்னர் விண்ணில் செலுத்துவோம் என்று திட்டக்குழு அறிவித்தது. ஆனால் எந்த தேதியில் ஏவுதல் இருக்கும் என்று எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அளிக்கப்படவில்லை.

காரணம்:
ஆர்டெமிஸ் 1 இறுதிக்கட்டத்தில் நிறுத்தப்படக் காரணம், அதன் நான்கு இன்ஜின்களில் மூன்றாவது இன்ஜின் திடீரெண்டு இயங்காதது தான். இறுதி நேரத்திற்குள் அதை சரி செய்ய முயற்சித்தனர். ஆனால் இன்ஜினில் என்ன கோளாறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு இன்ஜின் இல்லாமல் விண்கலத்தை ஏவ முடியாது. அப்படி ஏவினால் அது தோல்வியில் முடியும் என்பதைக் கருத்தில்கொண்டு இறுதிநேரத்தில் ஆர்டெமிஸ் 1 திட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்ஜினை சரி செய்யும் பணியில் பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Moon, NASA

அடுத்த செய்தி