53 ஆண்டுகள் கழித்து நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்பி, நீண்ட காலம் நிலவில் தங்க வைத்து ஆய்வு செய்யவும் ஏற்ற வகையில் ஒரு பயணத்திட்டத்தை உருவாக்க 'ஆர்டெமிஸ்' என்ற திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் 2025 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்பவுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டமாக ஆர்டெமிஸ் 1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது. நாசாவின் புதிய விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) ராக்கெட், ஓரியன் விண்கலம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தரை அமைப்புகளுக்கான முதல் ஒருங்கிணைந்த சோதனை விமானம் இதுவாகும்.
அதோடு ஓரியன் காப்ஸ்யூலில் உள்ள பேலோடில் அதிர்வு மற்றும் முடுக்கம் உணரிகளுடன் , மனித திசுக்களைப் பிரதிபலிக்கும் பொருட்களால் செய்யப்பட்ட மூன்று சோதனை டம்மிகளை நிலவுக்கு அனுப்பி மனித உடல் விண்வெளி கதிர்வீச்சால் எவ்வாறு பாதிக்கப்படும் என்று ஆராய இருந்தனர்.
இனி பார்வையற்றோர் கூட விண்வெளி அதிசியங்களின் புகைப்படத்தை உணர முடியும் - நாசா புதிய முயற்சி
கடந்த மாதம் 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.03 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் ஏவுவதற்கு நான்கு மணி நேரம் முன்னர், அதன் நான்கு இன்ஜின்களில் ஒன்று செயலிழந்தது. இதனால் ஆர்டெமிஸ் 1 ஏவும் திட்டம் கைவிடப்பட்டது. தேதி குறிப்பிடப்படாமல் ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டது. இன்ஜினை சரி செய்யும் பணியில் பொறியியலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று நாசா தனது அதிகாரபூர்வ அறிக்கையில், செப்டம்பர் 3, 2022 சனிக்கிழமை அன்று புளோரிடா நேரப்படி பிற்பகல் 2:17 மணிக்கு ஆர்ட்டெமிஸ் I ராக்கெட்டை ஏவுவதற்கான இரண்டாவது முயற்சியை நாசா மேற்கொள்ள உள்ளது என்று அறிவித்துள்ளது.. இந்திய நேரப்படி இரவு 11.47 மணிக்கு ஏவுதல் நிகழும்.
புளோரிடாவில் நடந்த ஒரு மாநாட்டின் போது மிஷன் மேலாளர் மைக்கேல் சரஃபின், "நாங்கள் சனிக்கிழமை விண்கலத்தை விண்ணில் ஏவ போகிறோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் நாங்கள் எங்களது முயற்சியைச் செய்யப் போகிறோம்" என்று கூறினார். ஏவுதலின் போது வானிலை சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 60 சதவீத வாய்ப்புகள் ஏவுதலுக்கு அனுமதியளிக்கும்.
இந்த ஏவுதல் நிகழ்வை நாசா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளம், பேஸ்புக் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மேற்காணும் இணைப்பிலும் காணலாம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.