செவ்வாய் கிரகத்தில் மைனஸ் 90 டிகிரி குளிரை தாங்கி சமாளித்தது நாசா ஹெலிகாப்டர்

 • Share this:
  செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியிருக்க முடியுமா, அங்கு எதாவது உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுப் பணிகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது.

  செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியிருக்க முடியுமா, அங்கு எதாவது உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுப் பணிகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. இது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அங்கு அது ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.

  செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை நாசா வடிவமைத்து கடந்தாண்டு விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் கடந்த பிப்ரவரியில் செவ்வாய்கிரகத்தை அடைந்தது. இந்நிலையில் அதில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜென்யூட்டி என்ற சிறிய ஹெலிகாப்டர் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

  இந்த ஹெலிகாப்டர் ஒன்று புள்ளி 8 கிலோ எடை கொண்டதாகும். பூமிக்கு வெளியே பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் வெப்ப நிலை மைனஸ் 90 டிகிரி வரை நிலவுகிறது.

  தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர் ஒரு இரவு முழுக்க கடுங்குளிரில் வைக்கப்பட்டபோதும் எந்த பாதிப்பையும் சந்திக்கவில்லை என நாசா அறிவித்துள்ளது. வரும் 11ம் தேதிக்குள் இந்த குட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் முதன்முறையாக பறக்கவிடப்பட உள்ளது.
  Published by:Vijay R
  First published: