• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • செவ்வாய் செல்லும் ரோவர் விண்கலத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்த நாசா

செவ்வாய் செல்லும் ரோவர் விண்கலத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைத்த நாசா

  • Share this:
    செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பவுள்ள ரோவர் விண்கலத்திற்கு 'பெர்சிசவரன்ஸ்' என்று நாசா, பெயரிட்டுள்ளது.

    நாசா, செவ்வாய் கிரகத்திற்கு ஜூலை மாதம் ஒரு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அது 2021-ம் ஆண்டுவாக்கில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த ரோவர் விண்கலத்திற்கு, 'பெர்சிசவரன்ஸ்' அதாவது விடாமுயற்சி என்று பெயரிட்டுள்ளது நாசா.



    Also see...ஜியோ, பிஎஸ்என்எல் எண்களுக்கு அழைத்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூன்

    அமெரிக்க மாணவர்களிடம் பள்ளி அளவில் நடத்தப்பட்ட போட்டிகளின் இறுதியிலேயே இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரைப் பரிந்துரைத்தன் மூலம் போட்டியில் வெற்றி பெற்ற அலெக்ஸ் என்ற மாணவர் பேசும் போது, 'விடாமுயற்சி என்பது அமெரிக்காவின் விடாமுயற்சி என்பதைத் தாண்டி மனிதகுலத்தின் முயற்சியைக் குறிக்கும்,' என்று குறிப்பிட்டார்.

    மாணவர் அலெக்ஸ்


    சந்திரன், செவ்வாய் என்பதையெல்லாம் தாண்டி புது புது விஷயங்களை கண்டறிய நாம் ஆவல் கொண்டுள்ளோம். இதில் ரோவர் போன்ற விண்கலங்களே இந்தப் பந்தயத்தில் நம்மை வெற்றிபெற வைக்கும். இதில் விடா முயற்சியும் முக்கியம். இந்தப் பயணத்தில் பல பின்னடைவுகள் ஏற்படலாம். எது எப்படியிருந்தாலும் நாம் விடப் போவதில்லை.

    Also read: அஜித்துக்கு சமூக ஊடக கணக்கு எதுவும் இல்லை; இணையவும் விரும்பவில்லை - அதிகாரப்பூர்வ விளக்கம்

    இந்த பெர்சிசவரன்ஸ்' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்தவரை 687 நாட்களாகும்.

    இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மை குறித்தும், செவ்வாயில் மனிதன் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் பற்றியும் தரவுகளை சேகரிப்பதோடல்லாமல், அங்கிருந்து, பாறை மற்றும் மண் ஆகியவற்றின் மாதிரிகளையும் கொண்டுவரும் என்றும் நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    இது மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு விண்வெளி பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: