நிலவில் மனிதன் விட்டுவந்த பொருட்கள் - குழப்பத்தை தவிர்க்க புதிய கொள்கையை வகுத்துள்ள நாசா

50 ஆண்டுகளுக்கு முன் மனிதன் முதல் முதலில் நிலவில் காலடி பதித்தான். அப்போது அவன் விட்டு வந்த பொருட்களால் நிலவில் ஏற்படும் பாதிப்பை கணித்துள்ள நாசா, தனது விண்வெளி திட்டங்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது

நிலவில் மனிதன் விட்டுவந்த பொருட்கள் - குழப்பத்தை தவிர்க்க புதிய கொள்கையை வகுத்துள்ள நாசா
மாதிரிப்படம் (Credits: Space.Com)
  • News18
  • Last Updated: July 10, 2020, 10:02 PM IST
  • Share this:
1969-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசாவின் அப்போலோ 11 விண்கலம் நிலவில் Tranquillity base என்ற இடத்தில் தரையிறங்கியது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 6 முறை நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது நாசா.  இந்த பயணத்தின்போது, நாசா விண்வெளி வீரர்கள் மூன்று கோல்ஃப் பந்துகள், சில புகைப்படங்கள், சில ஆய்வு கருவிகள், ஒரு சிறிய சிலை, அமெரிக்க தேசிய கொடி மற்றும் மனித கழிவுகள் அடங்கிய பைகளை நிலவில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

இதுபோன்ற கழிவுகளை மற்றொரு கோளில் விட்டுவிட்டு வருவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்த நாசா, இது அந்த கோளின் தன்மையை பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளது. உதாரணத்திற்கு இந்த பொருட்களோடு , பூமியில் இருக்கும் நுண் உயிர்கள் நிலவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இந்த பகுதியை ஆய்வு செய்யும் விண்வெளி வீரர்கள் அந்த நுண் உயிர் மாதிரிகள், நிலவில் உருவானவை என்று தவறாக கணிக்க வாய்ப்புள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க நாசா புதிய கொள்கையை வகுத்துள்ளது.

அந்தவகையில், நிலவின் மேல்பரப்பு இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உறைந்த நிலையில் அதிக அளவு நீர் இருப்பதாக கருதப்படும் துருவப்பகுதிகள் சிறப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்த பகுதிக்கு விண்கலத்தையோ மனிதனையோ அனுப்பும்பட்சத்தில் பூமியில் உள்ள நுண் உயிர்கள் அங்கு பரவிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான புதிய பாதுகாப்பு வழிமுறைகளை நாசா அறிவித்துள்ளது. அதன்படி, பூமி சார்ந்த எந்த பொருட்களையும் அங்கு விட்டு வரக் கூடாது. அதேநேரம், நிலவின் பிறகு பகுதிகளை ஆராய்வதற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.




படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கைபடிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..








இந்த புதிய வழிமுறையின்படி பார்த்தால், நீல் ஆம்ஸ்ட்ராங் தரையிறங்கிய பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ஆகவே, நிலவில் முதன் முதலில் கால்பதித்த மனிதன் விட்டுவந்த பொருட்கள், எதிர்காலத்தில் நிலவு குறித்த ஆய்வு முடிவுகளை பாதிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இதேபோல், 2030ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தின் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசாவும், ஐரோப்பிய விண்வெணி ஆய்வு நிறுவனமும் திட்மிட்டுள்ளன. ஆகவே, நிலவைப்போலவே, செவ்வாய் கிரக பயணத்திற்கும் புதிய கொள்கைகளை வகுத்துள்ளது நாசா. அதன்படி, பூமியின் நுண்உயிர்கள், செவ்வாய் கிரகத்தில் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதுடன், செவ்வாயிலிருக்கும் நுண் உயிர்கள் பூமிக்கு வராமல் இருப்பதும் உறுதி செய்யப்படும்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading