செவ்வாய் கிரகத்தில் பறக்கப் போகும் முதல் ஹெலிகாப்டர் - அமெரிக்காவின் 'பெர்சிவியரன்ஸ்' விண்கலத்தின் பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, "பெர்சிவியரன்ஸ்" என்ற விண்கலத்தை அமெரிக்கா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

செவ்வாய் கிரகத்தில் பறக்கப் போகும் முதல் ஹெலிகாப்டர் - அமெரிக்காவின் 'பெர்சிவியரன்ஸ்' விண்கலத்தின் பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பம்
பெர்சிவியரன்ஸ் விண்கலம்
  • Share this:
விண்வெளி துறையில் போட்டி போட்டு ஆய்வு செய்து வரும் நாடுகள், நிலவைத் தாண்டி செவ்வாய் கிரக ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளன. அதாவது, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? அங்கு தண்ணீர் உள்ளதா? என அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன.

அந்த முயற்சியின் தொடர்ச்சியாக, விடாமுயற்சி என பொருள்படும் பெர்சிவியரன்ஸ்" என்ற விண்கலத்தை, அமெரிக்காவின் நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

7 மாத கால பயணத்திற்கு பிறகு இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும். செவ்வாய் கோளின் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தும் அதிநவீன கருவிகள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக துளையிடும் இயந்திரம், 23 அதிநவீன கேமிராக்கள், 2 மைக்ரோபோன்கள் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டுள்ளன.


இந்த விண்கலத்துடன் 1.8 கிலோ கிராம் எடை கொண்ட சிறிய ஹெலிகாப்டரும் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேற்று கிரகத்தில் பறக்கும் முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமையை இது பெரும்.

ஒரு சராசரி கார் அளவில், ஆறு சக்கரில் ஓடும் `Perseverance' ரோவர் 7-அடி கொண்ட ரோபோ பாறையைத் துளைத்து, மாதிரிகளைச் சேகரிப்பதற்கான திறன் படைத்தது. செவ்வாய்க்கிரகத்தில் உள்ள மாதிரிகளைச் சேமித்து பூமிக்கு அனுப்ப இந்த ரோவரில் 43 மாதிரி குழாய்கள் உள்ளன, ஒவ்வொன்றும் பூமியிலிருக்கும் நுண்ணுயிர்களை அகற்றுவதற்காகக் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி அனுப்பப்படுகின்றன.

ஒவ்வொரு குழாயிலும் 15 கிராம் எடையுள்ள மாதிரிகள் வைத்திருக்க முடியும். பூமிக்குத் திரும்புவதற்குள் 0.5 கிலோ கிராம் எடையுள்ள மாதிரிகளைச் சேகரிப்பதே இதன் குறிக்கோள். 2026-ம் ஆண்டில் மீண்டும் இந்த மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வரும் திட்டம் தொடங்கப்படும்.ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுவரும் 'Curiosity' ரோவரை விட அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம், சீனாவை தொடர்ந்து இந்த மாதத்தில் செவ்வாய் கோளுக்கு அனுப்பப்படும் மூன்றாவது விண்கலம் இதுவாகும்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading