ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

நாசாவின் 60 ஆண்டுகள் பழைய ஆய்வகக் கட்டிடம் இடித்து தரைமட்டம்... காரணம் என்ன?

நாசாவின் 60 ஆண்டுகள் பழைய ஆய்வகக் கட்டிடம் இடித்து தரைமட்டம்... காரணம் என்ன?

நாசா

நாசா

அமெரிக்காவின் விண்வெளித் திட்டத்தின் திறம்பட செயல்பாட்டிற்காக பழைய கட்டிடங்களை புதுப்பிக்க " மாஸ்டர் வசதிகள் திட்டம்” தொடங்கப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய கட்டிடம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

சந்திரனுக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்புவதில் முக்கிய பங்காற்றிய அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள மார்ஷல் விண்வெளி விமான மையத்தில் உள்ள 6 தசாப்தங்கள் பழமையான கட்டிடத்தை அக்டோபர் 29 அன்று மாலை 6 மணியளவில் நாசா இடித்தது.

1963 முதல் 2020 வரை மார்ஷலின் நிர்வாகத் தலைமையகமான 4200 என்ற கட்டிடம் ஆறு வினாடிகளில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இங்கு கட்டப்படும் கட்டிடம் நாசா விண்வெளியில் அடுத்த நூற்றாண்டின் மதிப்புள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்படும் புதிய, அதிநவீன வசதிகளுக்கு வழிவகுக்கும்.

' isDesktop="true" id="827518" youtubeid="dRtLqKa_5bY" category="technology">

நாசாவின் மாஸ்டர் பிளான்

அமெரிக்காவின் விண்வெளித் திட்டத்தின் திறம்பட செயல்பாட்டிற்காக பழைய கட்டிடங்களை புதுப்பிக்க " மாஸ்டர் வசதிகள் திட்டம்” தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு கள மையத்தையும் மாற்றியமைத்து வருகிறது. புதிய கட்டிடங்களில் ஆற்றல் செலவுகள், நீர் நுகர்வு, காற்றின் தரம் மற்றும் பணிச்சூழலியல் ஆகியவை அடங்கும்.

1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரயில்... ஸ்விட்சர்லாந்து செய்த சாதனை!

நாசாவின் கூற்றுப்படி, மார்ஷல் விண்வெளி மையத்தில் இத்தகைய அணுகுமுறை வசதி இயக்க செலவுகளில் 65% வரை சேமிக்கப்பட்டது மற்றும் பயன்பாட்டு செலவுகளை 35% முதல் 40% வரை குறைத்துள்ளது.

அப்பல்லோ, ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் போது மார்ஷலில் உள்ள வசதிகள் முக்கியப் பங்கைக் ஆற்றின. இந்த கட்டிடத்தில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு, நொடிகளில் கட்டிடம் சீட்டுக்கட்டுகளாக சரிந்து தரைமட்டமான

Published by:Ilakkiya GP
First published:

Tags: NASA