ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பூமியை அச்சுறுத்தும் விண்கல்லுடன் நேரடியாக மோதிய விண்கலம் : நாசா மேற்கொண்ட சோதனையில் வெற்றி..!

பூமியை அச்சுறுத்தும் விண்கல்லுடன் நேரடியாக மோதிய விண்கலம் : நாசா மேற்கொண்ட சோதனையில் வெற்றி..!

நாசா

நாசா

பூமியிலும் விண்வெளியிலும் உள்ள ஜேம்ஸ் வெப் உட்பட தொலைநோக்கிகளில் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட ஒரு பிரகாசமான தூசி மேகத்தைக் காண முடிந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஒரு அண்டப் பொருளால் பூமியில் பேரழிவு ஏற்படுத்துவதைத் தடுக்கும் மனிதகுலத்தின் திறனின் வரலாற்று சோதனையாக நாசாவின் DART விண்கலம் திங்களன்று சிறுகோள் Dimorphos ஐ தாக்கி துகள்களாக்கியது.

கலிபோர்னியாவில் இருந்து இரட்டை சிறுகோள் திசைதிருப்பல் சோதனை ஆய்வு முதல் வகையான பரிசோதனையை மேற்கொண்ட 10 மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 7:14 மணிக்கு (23:14 GMT) இந்த டிமோர்போஸ் தாக்குதல் சோதனை நிகழ்த்தப்பட்டது.

டிமோர்போஸ் (Dimorphos) -- 530-அடி (160-மீட்டர்) விட்டம் கொண்ட சிறுகோள். ஓர் எகிப்திய பிரமிட்டுடன் ஒப்பிடத்தக்க அளவு கொண்டது. DART அதை நோக்கி மணிக்கு சுமார் 14,500 மைல் (23,500 கிலோமீட்டர்) வேகத்தில் பாய்ந்து, அதன் முட்டை போன்ற வடிவம் மற்றும் கரடுமுரடான, பாறாங்கல் புள்ளியிடப்பட்ட மேற்பரப்பு கடைசி சில நிமிடங்களில் தெளிவான படங்களை அனுப்பிவிட்டு அதில் மோதி தகர்த்தது.

டிமோர்போஸைத் தாக்குவதன் மூலம், நாசா அதை ஒரு சிறிய சுற்றுப்பாதையில் தள்ளியது. டிமோர்போஸின் சுற்றுபாதை 10 நிமிடங்களாக இருந்தது. அது தற்போது 11 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆக மாறியுள்ளது. ஆர்மகெடான், டோன்ட் லுக் அப் போன்ற அறிவியல் புனைகதைகளில் மட்டுமே முயற்சித்ததை, நாசா இன்று உண்மையாகி வருகிறது.

தரைத் தொலைநோக்கிகளால் சிறுகோள் அமைப்பை நேரடியாகப் பார்க்க முடியாது. ஆனால் அதிலிருந்து வரும் ஒளியின் வடிவங்களில் மாற்றத்தைக் கண்டறிய முடியும். வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் இப்போது தாக்கப்பட்ட சிறுகோளின் ஒரு உறுதியான சுற்றுப்பாதை காலத்தை வழங்கும் என்று நம்புகிறது.

செவ்வாய் சுற்றுப்பாதை பயணத்தில் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்த 'மங்கள்யான்'!

மோதல் படங்கள்:

சில வாரங்களுக்கு முன்பு DART -லிருந்து பிரிந்த LICIACube எனப்படும் டோஸ்டர் அளவிலான செயற்கைக்கோள், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு, மோதல் மற்றும் எஜெக்டாவின் படங்களைப் பிடிக்க சிறுகோளின் தளத்தை நெருங்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறுகோள் மோதலில் தூளாக்கப்பட்ட பாறைபட்டு செயலிழந்துவிட்டது. இருப்பினும் அதற்கு முன்பு எடுக்கப்பட்ட LICIACube இன் படங்கள் அடுத்த வாரங்களில் பூமியை அடையும்.

பூமியிலும் விண்வெளியிலும் உள்ள ஜேம்ஸ் வெப் உட்பட தொலைநோக்கிகளில் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட ஒரு பிரகாசமான தூசி மேகத்தைக் காண முடியுந்தது.

டிமார்போஸின் மேற்பரப்பை பற்றி ஹீரா என்றழைக்கப்படும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் நான்கு வருட பயணத்தின் போது கண்டறிந்த அமைப்பு, எடை, தன்மை குறித்த முழுப் படம் வெளியிடப்படும்போதுதான் தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீல நிற ஏரிகளை பார்க்கும் கடைசி தலைமுறை நாமாக இருக்கலாம்- அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்

புவியியல் பதிவேட்டில் பார்க்கும்போது ஆறு மைல் அகலமுள்ள சிக்சுலுப் சிறுகோள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது. உலகத்தை ஒரு நீண்ட குளிர்காலத்தில் மூழ்கடித்தது. இது டைனோசர்களின் மொத்த அழிவுக்கு வழிவகுத்தது என்ற சொல்லப்படுகிறது.

அதுபோல வரும் காலத்தில் எந்த அழிவும் ஏற்படாமல் காத்துக்கொள்ள இந்த நாசாவின் சோதனையில் ஏற்பட்ட வெற்றி வழி அமைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். டிமோர்போஸ் போன்ற சிறிய கோள்கள் மோதினால் பூமியில் உள்ள சில பகுதிகள் சேதமாக்கலாம். அந்த மாதிரியான சேதங்கள் கூட இனி நிகழாமல் நம் பூமியை காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Asteroid, NASA