1972 க்கு பிறகு நாசா 2025 இல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 50 ஆண்டுகள் கழித்து மனிதர்களை அனுப்ப இருப்பதால் அதற்கான தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு சோதனைகளை செய்து வருகிறது.
அதன் முதற்கட்ட பணியாக ஆர்டெமிஸ் 1 ஏவுகணை மூலம் ஓரியன் என்ற விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்ப இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே முயற்சிகள் எடுக்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்ட சோதனை ஓட்டம், கடந்த மாதம் 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
ஆர்டெமிஸ் 1 ஏவுகணையை இருந்து பிரிந்து ஓரியன் விண்கலம் 6 நாட்கள் பயணித்து நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது. நிலவுக்கு மிக அருகில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் பயணித்து சாதனை படைத்தது. நிலவில் மேற்பகுதியோடு நிலவில் இருந்து பூமியின் காட்சியையும் படம் பிடித்து அனுப்பியது.
இதையும் படிங்க : செவ்வாயில் மீண்டும் ஆய்வைத் தொடங்கிய நாசா... மாதிரிகள் சேகரிப்பு!
அதோடு 1970 களில் மனிதர்கள் நிலவில் தரை இறங்கிய இடங்களுக்கு மேலே பறந்த ஓரியன் அதன் படங்களை எடுத்ததோடு நிலவை சுற்றி தனது 25 பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.
கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மைல்கள் தூரம் பயணித்த ஓரியன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது சுமார் 2800 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தை தகவமைத்து பின்னர் பாராச்சூட் மூலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்தது.
25 நாள் பயணத்தில் விண்வெளி, நிலவின் வளிமண்டலம், பூமிக்கு திரும்பிய போது ஏற்பட்ட வளிமண்டல வெப்பம் மற்றும் அழுத்தத்தினால் விண்கலத்தின் உள்ளே என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன போன்ற தகவல்களை ஓரியன் விண்கல சென்சார் பதிவு செய்துள்ளது. தரை இறங்கிய பிறகு கேப்சியூளின் சென்சார்களில் இருந்து தரவுகளை நாசா விஞ்ஞானிகள் சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : வெளியானது ஸ்மார்ட் டிவிக்கான ஆண்ட்ராய்டு 13 அப்டேட்: முழு விவரம் இதோ!
1970 களில் பயன்படுத்திய விண்கல கேப்சியூல் உடல் அமைப்புகளை மேம்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஓரியன் கேப்சியூல் மனிதர்கள் நிலவுக்கு போகும் போது ஏற்படும் மாற்றங்களை கணிக்கவும் அதற்கு ஏற்ப தொழல்நுட்பங்களை மேம்படுத்தவும் உதவும் என்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக 2024 இல் நிலவில் தரை இறங்காத ஆர்டெமிஸ் 2 மூலம் மனிதர்களை நிலவிற்கு அருகில் கொண்டு செல்லும் திட்டத்திற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 2025 இல் மனிதர்களை நிலவின் தென்துருவத்திற்கு அழைத்துச்செல்ல ஆர்டெமிஸ் 3 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவை அனைத்திற்கும் இந்த தரவுகள் முக்கியம்.
நிலவிற்கு அனுப்ப இருக்கும் மனிதர்களின் விபரம் விரைவில் நாசாவால் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.