சர்ச்சை, விமர்சனங்களைத் தாண்டி சுமார் ஒரு கோடி டவுன்லோடுகளைப் பெற்ற ‘நமோ’ஆப்!

நமோ ஆப் மூலம் அரசியல் ரீதியான தவறான பரப்புரைகளும் போலியான செய்திகளும் பரவி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Web Desk | news18
Updated: February 18, 2019, 12:15 PM IST
சர்ச்சை, விமர்சனங்களைத் தாண்டி சுமார் ஒரு கோடி டவுன்லோடுகளைப் பெற்ற ‘நமோ’ஆப்!
நமோ ஆப்
Web Desk | news18
Updated: February 18, 2019, 12:15 PM IST
விமர்சனங்களையும் மீறி பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ‘நமோ’ ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு கோடி டவுன்லோடுகளைக் கடந்துள்ளது.

அரசு சார்பாக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஆப், கட்சியின் பிரச்சார ஆப் ஆக மட்டுமே செயல்பட்டதாக எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. நமோ ஆப் மூலம் அரசியல் ரீதியான தவறான பரப்புரைகளும் போலியான செய்திகளும் பரவி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசின் நல்திட்டங்களையும் பிரதமரின் செயல்பாடுகளையும் அறிந்துகொள்வதற்காக மட்டுமே நமோ ஆப் கொண்டு வரப்பட்டது. ஆனால், பாஜக-வின் பிரச்சார ஆப் ஆகவே மாறியுள்ளது நமோ ஆப். குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் மேலும் அதிகரித்துள்ளன.


எது, எப்படியானாலும் ‘நமோ’ ஆப் கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி டவுன்லோடுகளை விமர்சனங்களையும் தாண்டி பெற்றுள்ளது என்றே சிலாகித்துக்கொள்கின்றனர் ஆளும் கட்சியினர்.

மேலும் பார்க்க: பாக்., வெளியுறவு அமைச்சக வெப்சைட் ஹேக் செய்யப்பட்டது
First published: February 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...