ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

OLX-ல் பழைய சாமான்கள் விற்க முயன்ற நபரிடம் QR Code-யை வைத்து மோசடி.. பறிபோன ரூ.6.30 லட்சம்!

OLX-ல் பழைய சாமான்கள் விற்க முயன்ற நபரிடம் QR Code-யை வைத்து மோசடி.. பறிபோன ரூ.6.30 லட்சம்!

Online Fraud

Online Fraud

Online Fraud: பழைய பர்னிச்சர்களை ஆன்லைன் மூலம் விற்க முயன்ற சாப்ட்வேர் இன்ஜினியரிடம் இருந்து 6.30 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பழைய பர்னிச்சர்களை ஆன்லைன் மூலம் விற்க முயன்ற சாப்ட்வேர் இன்ஜினியரிடம் இருந்து 6.30 லட்சம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் பொருட்களை வாங்குவதும், விற்பதும் சர்வbசாதாரணமாக நடந்து வரும் காலத்தில், அதே ஆன்லைனை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணமோசடி நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள கோரேகான் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது வீட்டில் உள்ள பழைய பர்னிச்சர்களை OLX இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்து, சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கால் செய்த நபர் ஒருவர் தான் அந்த பர்னிச்சரை வாங்கிக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

4 ஆயிரம் ரூபாய் கொடுத்து மரத்தாலான கப்போர்டு ஒன்றினை வாங்கிக்கொள்வதாக கூறிய மோசடி ஆசாமி, சாப்ட்வேர் இன்ஜினியரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு QR குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்து, தான் அனுப்பியுள்ள 2 ரூபாய் வந்துள்ளதா? என பரிசோதிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். உடனடியாக சாப்ட்வேர் இன்ஜினியரும், அந்த நபர் அனுப்பிய QR Code -யை ஸ்கேன் செய்து, அவர் அனுப்பிய தொகை வந்திருப்பது உறுதி செய்துள்ளார்.

Also read:  Android-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க உதவிய இந்திய தொழில்நுட்ப வல்லுநருக்கு வெகுமதியோடு நன்றி தெரிவித்த கூகுள்!

மீண்டும் வேறு ஒரு QR Code -யை அனுப்பிய அந்த நபர், இதில் பர்னிச்சருக்கான முழு பணமும் வந்துள்ளதா? என பார்க்க சொல்லியிருக்கிறார். அந்த QR Code -யை ஸ்கேன் செய்ததை அடுத்து, சாப்ட்வேர் இன்ஜினியரின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் 3 தவணைகளாக திருடப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதிர்ச்சி அடைந்த சாப்ட்வேர் இன்ஜினியர் மோசடி ஆசாமிக்கு போன் செய்த போது, அவரோ தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரிவிட்டு, பணத்தையும் திரும்ப அனுப்புவதாக சொல்லியிருக்கிறார். பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறிய மோசடி ஆசாமி, பாதிக்கப்பட்டவரிடம் தனது சொந்த வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்து, அதை சாப்ட்வேர் இன்ஜினியர் அவர் நெட்பேங்கிங்குடன் இணைக்கச் சொல்லியிருக்கிறார்.

Also read:  ‘மேட் இன் இந்தியா’ பொருட்களுக்கு தனி ஸ்டோர் தொடங்கியுள்ள அமேசான் நிறுவனம்!

எப்படியாவது பணத்தை திரும்ப பெற்றால் போதும் என நினைத்த சாப்ட்வேர் இன்ஜினியரும், அந்த அடையாளம் தெரியாத நபர் சொன்னபடி, வங்கிக் கணக்கை தனது நெட் பேங்கிங் கணக்குடன் இணைத்து, அவருக்குக் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் செய்துள்ளார். ஆனால், அவரது கணக்கில் இருந்து அதிக பணம் எடுக்கப்பட்டு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பத்து பரிவர்த்தனைகளில், அவரது கணக்கில் இருந்து, 6.30 லட்சம் ரூபாயை அந்த மோசடி ஆசாமி ஆட்டையைப் போட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாப்ட்வேர் இன்ஜினியர் இச்சம்பவம் குறித்து கோரேகான் பகுதி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

ஆன்லைனில் பழைய சாமான்களை விற்க முயற்சித்தவரிடம், ஒரே ஒரு போன் கால், QR Code-யை வைத்து லட்சங்களை சுருட்டிய சம்பவம் ஆன்லைன்வாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

First published:

Tags: Cyber crime, Cyber fraud, Online crime