ஆர்டர் செய்த செல்போன் திருட்டு... அமேசான் நிறுவனருக்கு மெயில் அனுப்பி பணத்தை பெற்ற நபர்!

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், நுகர்வோருக்கான சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்துவது பற்றி பல பிரபலமான கதைகள் உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
உண்மையாக உழைத்த காசு உங்களைவிட்டு செல்லாது என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

ஆமேசான் CEO-விற்கு மின்னஞ்சல் அனுப்பி தனது விடாமுயற்சியால் திருட்டு போன மொபைலுக்கான பணத்தை பெற்றுள்ளார் மும்பை நபர். தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், நுகர்வோருக்கான சிக்கல்களை தீர்ப்பதில் கவனம் செலுத்துவது பற்றி பல பிரபலமான கதைகள் உள்ளன.

அந்த வரிசையில் சமீபத்தில் மும்பையை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் காணாமல் போன தனது அமேசானில் ஆர்டர் செய்த போன் குறித்து பெசோஸுக்கு கடிதம் எழுதிய நிலையில், சில நாட்களில் அமேசான் நிர்வாகிகள் அவரைத் தொடர்பு கொண்டு அவரது பிரச்சினையைத் தீர்த்துள்ளனர்.  அமேசான் வாடிக்கையாளர்கள் அனுப்பக்கூடிய அனைத்து மின்னஞ்சல்களையும் பெசோஸ் படிக்கிறார் என்று அர்த்தமில்லை, ஆனால் அதில் சிலவற்றிக்கு அவர் பதிலளிக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது.

மும்பையில் வசிக்கும் ஓம்கர் ஹன்மந்தே என்பவர் அமேசான் இந்தியா வலைத்தளத்திலிருந்து தனது பாட்டிக்கு ஒரு போனை வாங்க நினைத்து, ஒரு நோக்கியா போனை ஆர்டர் செய்தார். ஆனால் அவர் அதை பெறவேயில்லை, இருப்பினும் அவரது ஆர்டருக்கான வலைப்பக்கம் அவர் போனை பெற்றுவிட்டார் என காட்டியது. இதனை பார்த்து சற்று குழப்பமும், கவலையும் கொண்ட ஓம்கர், பெசோஸுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில்,

"ஹாய் ஜெஃப்

நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்,

உங்கள் வாடிக்கையாளர் சேவை மற்றும் விநியோக நெறிமுறைகளால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். அமேசானிலிருந்து நான் ஆர்டர் செய்த நோக்கிய போன் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை, ஆனால் அது என் சொசைட்டி வாயிலில் வைக்கப்பட்டது, அதை யாரோ ஒரு திருடன் எடுத்துவிட்டான். டெலிவரி பற்றி எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

இதை பற்றி உங்கள் வாடிக்கையாளர் சேவை குழுவிடம் நான் கேட்டபோது விசாரணை நடந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள், நான் ஒரு உயிரற்றவருடன் பேசுவதைப் போல ஒரு நிலையான பதிலை அவர்கள் எனக்கு கொடுக்கிறார்கள். இந்த திருட்டு பற்றிய சி.சி.டி.வி காட்சிகள் கீழே உள்ள இணைப்பில் உள்ளன. இந்த நடைமுறை மிகவும் வெறுப்பாக இருக்கிறது, மீண்டும் உங்கள் வலைத்தளத்திலிருந்து பொருட்களை வாங்குவதற்கு முன்பு நான் இரண்டு முறை யோசிப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் வாடிக்கையாளர் மின்னஞ்சல்களை படிப்பதில் பெயர் பெற்றவர். அவர் ஒரு வாடிக்கையாளருக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும், அவர் அந்த மின்னஞ்சல்களை பொறுப்பான நிர்வாகிகளுக்கு அனுப்புகிறார். தனக்கு அனுப்பப்பட்ட வாடிக்கையாளர் மின்னஞ்சல்களை தனிப்பட்ட முறையில் வாசிப்பதாக நேர்காணல்களில் பெசோஸ் கூறியுள்ளார். இந்த நிலையில் ஓம்கர் மெயில் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, அமேசானின் வாடிக்கையாளர் ரிலேசன் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரிடமிருந்து அவருக்கு பதில் கிடைத்தது.

Also read... பிக்பாஸ் வீட்டில் முகமூடிகள் அவிழ ஆரம்பித்துவிட்டது: இந்த வாரம் வெளியேறப்போவது யார்?... கமல் சூசகம்!அதில் நிர்வாகி ஒரு விரிவான பதில் மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதில், "ஜெஃப் பெசோஸ் உங்கள் மின்னஞ்சலை பெற்றார், நான் அவர் சார்பாக பதிலளிக்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது. முன்னதாக ஓம்கர் வழங்கிய திருட்டுக்கான ஆதாரங்களை அமேசான் நிர்வாகிகள் பார்த்தார்கள். தொலைபேசி சரியான முகவரிக்கு வழங்கப்பட்டது, ஆனால் டெலிவரி செய்த நபர் பார்சலை நுழைவு வாயிலில் விட்டு வெளியேற முடிவு செய்ததால் அது சரியான உரிமையாளரின் கைகளில் சென்று சேரவில்லை.

சி.சி.டி.வி காட்சிகளை பார்த்தபோது, ஒரு நபர் தொலைபேசியை திருடி செல்வதைக் காண முடிந்தது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு ஓம்கர் தனது பணத்தை திரும்ப பெற்றார். இதுகுறித்து பேசிய ஓம்கர், "அமேசான் முற்றிலும் செயலாக்கப்பட்ட அடிப்படையிலான ஒரு நிறுவனம். ஒரு வாடிக்கையாளரின் புகார் உண்மையானது என்றால், அவர்கள் தயாரிப்பை திருப்பி தருவார்கள் அல்லது மறுவடிவமைப்பார்கள். வாடிக்கையாளர் சேவையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அமேசான் என்னை மகிழ்ச்சியான ஒரு வாடிக்கையாளராக தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று உற்சாகமாக கூறுகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: