Home /News /technology /

திரும்ப வந்துட்டேனு சொல்லு.. மின்சாரப்பேருந்து வடிவில் மும்பையில் மீண்டும் வரும் டபுள் டெக்கர் பேருந்துகள் !

திரும்ப வந்துட்டேனு சொல்லு.. மின்சாரப்பேருந்து வடிவில் மும்பையில் மீண்டும் வரும் டபுள் டெக்கர் பேருந்துகள் !

டபுள் டெக்கர் பேருந்து

டபுள் டெக்கர் பேருந்து

கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஒரு காலத்தில் அதிகம் காணப்பட்டாலும், தற்போது மும்பையில் மட்டுமே இயங்கி வருகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
மும்பையின் சிறப்பம்சமாக டபுள் டெக்கர் பேருந்துகள் , பிரஹன்மும்பை எலக்ட்ரிக் சப்ளை அண்ட் டிரான்ஸ்போர்ட் (பெஸ்ட்) அண்டர்டேக்கிங் நிறுவனத்துடன் இணைந்து மின்சார பேருந்து வடிவில் மீண்டும் வர உள்ளன.

கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, திருவனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் ஒரு காலத்தில் அதிகம் காணப்பட்டாலும், தற்போது மும்பையில் மட்டுமே இயங்கி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 1937 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்து, 1990 இல் மும்பை அதிக எண்ணிக்கையிலான டபுள் டெக்கர் பேருந்துகளைக் கொண்டிருந்தது, 1995 க்குப் பிறகு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2006 வாக்கில், நகரின் முதன்மையான சாலைப் போக்குவரத்துப் பயன்பாட்டில் வெறும் 225 டபுள் டெக்கர் பேருந்துகளே இருந்தது.

ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் முதல் ஹிராம் பிங்காம் வரை..உலகின் பிரம்மாண்டமான ஆடம்பர ரயில்களின் பட்டியல்.

ஆனால் இன்று மும்பையில் தெற்குப் பகுதியில் சுமார் 50 மட்டுமே இயங்குகின்றன.மேலும் சில சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய சுற்றுலாவை வழங்கப் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதுள்ள இந்த பேருந்துகள்  2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவைகளும் செயல்பாட்டுத் திறன் குன்றி முடங்கும் நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் டபுள் டக்கர்…
கடந்த வாரம் இந்தியாவிலேயே முதல் மின்சார குளிரூட்டப்பட்ட டபுள் டெக்கர் பேருந்து பிரஹன்மும்பை பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது செப்டம்பர் முதல் சாலைகளில் வரும் என்று பெஸ்ட் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா தெரிவித்தார்.

"1990 களில், எங்களிடம் 900 டபுள் டெக்கர் பேருந்துகள் இருந்தன. தற்போது இரண்டு பேருந்து ஒப்பந்ததாரர்கள் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிறந்த 900 மின்சார டபுள் டெக்கர்களை வழங்குவார்கள். அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1990 இல் இருந்த எண்ணிக்கை நிலைக்குத் திரும்புவோம்” என்று கூறினார்.

மும்பை கடுமையான போக்குவரத்துக்கு நெரிசலை சந்தித்து வருகிறது. டபுள் டக்கர் பேருந்தில் ஒரே சமயத்தில் 100 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். ஒரு நாளைக்கு 33 லட்சம் பயணிகளில் இருந்து 40 லட்சமாக பெஸ்ட் பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்தும். இரட்டை அடுக்கு பேருந்துகளில் 78 பயணிகளும், ஒற்றை அடுக்கு மின்சார பேருந்துகளில் 54 பயணிகளும் பயணிக்க இயலும்.

இறப்பதற்குள் கைதாக வேண்டும்.. சபதமேற்று நிறைவேற்றிய பாட்டி!

புதிய மின்சார ஏசி டபுள் டெக்கர் பேருந்தில் இரட்டை கதவு-படிக்கட்டு அமைப்பு, பெரிய ஜன்னல்கள், வசதியான இருக்கைகள், சிசிடிவிகள், தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் உள்ளன.

குத்தகை முறை உள்ளீடு :
புதிய மின்சார பேருந்துகள் வெட் லீஸ் எனும் முறைப்படி மேற்கொள்ளப்படுகிறது. இதில் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பு செலவுகளை ஒப்பந்தக்காரர்கள் கவனித்துக் கொள்வர் என்று , கடந்த வாரம் புதிய டபுள் டெக்கரை அறிமுகப்படுத்தியபோது சந்திரா சுட்டிக்காட்டினார்.

லாபம்:
தற்போதுள்ள பேருந்துகளின் இயக்கச் செலவு கிலோமீட்டருக்கு ₹150 ஆகிறது. அதுவே தற்போதைய குத்தகை மாடலில் உள்ள டபுள் டெக்கர் மற்றும் சிங்கிள் டெக்கர் இ-பஸ்களின்  இயக்க செலவு கிலோமீட்டருக்கு முறையே ₹ 56 மற்றும் ₹ 46 ஆகும். இது மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

இது தவிர, இரட்டை அடுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ₹ 79 வருவாய் ஈட்டுகிறது. ஒற்றை அடுக்கு பேருந்துகள் கிமீக்கு மட்டுமே கொடுக்கும். இதனால் வருமானம் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Electric Buses, Mumbai

அடுத்த செய்தி